இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா ஒரு சூப்பர் கணினியை உருவாக்குவதற்கோ, விண்வெளி பயணத்தைத் தொடங்குவதற்கோ, அல்லது உலகத் தரம் வாய்ந்த ஏவுகணையை வடிவமைப்பதற்கோ அமெரிக்கா, ஐரோப்பா அல்லது ரஷ்யாவை நாட வேண்டியிருந்தது. ஆனால், இன்று இந்தியா அதே பணிகளை செலவு குறைவாகவும், வேகமாகவும், சில சமயங்களில் சிறப்பாகவும் செய்கிறது.
சந்திரயான் விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது, அமெரிக்காவே செய்யாத ஒன்றை செய்து முடித்தது. இந்த நிலையில் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என இந்தியாவுக்கு கொடுத்த அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பின்னர் ரஷ்யாவில் இருந்து இந்தியா நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை கூடுதலாக இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது அமெரிக்காவை இந்தியா ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதை தெளிவு படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகளுக்கு 50% வரி விதித்ததற்கு பதிலடியாக, இந்தியாவில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமெரிக்க பிராண்டுகளுக்கு எதிராக புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம் கோகோ-கோலா மற்றும் பிற அமெரிக்க குளிர்பானங்களுக்கு தங்கள் வளாகத்தில் தடை விதித்துள்ளது.
பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு, கேஎஃப்சி, சப்வே உள்ளிட்ட பிரபல அமெரிக்க நிறுவனங்கள் இந்திய சந்தையில் வியாபாரிக்களமாக வேரூன்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டுமென்று சமூக வலைதளங்களில் வேகமாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இது அமெரிக்காவிற்கே பெரும் பொருளாதார சவாலாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேற்குவங்கம் மற்றும் தென்னிந்தியாவில் மெக்டொனால்ட்ஸை இயக்கும் ‘வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட் லிமிடெட்’ நிறுவனம், 2024 நிதியாண்டில் ரூ.2,390 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அதே நேரத்தில், பெப்சிகோ நிறுவனம் மட்டும் இந்தியாவில் ரூ.8,200 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய சந்தையில் மட்டுமே ரூ.3,500 கோடி முதல் ரூ.4,000 கோடி வரை முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்நிறுவனங்களை இந்திய மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினால், அமெரிக்க நிறுவனங்களுக்கே பெரும் இழப்பாகும்.
இந்நிலையில் சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சுமார் ஏழு ஆண்டுக்கு பின்பு சீனா சென்றுள்ளார். இந்தப் பயணம், அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
2018-க்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்லும் முதல் பயணம் இது. 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா உறவில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்த பிறகு, சீனா – இந்தியா உறவில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவின் மீது 50% சுங்க வரி விதித்திருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், சீனாவுடனான உறவை மேம்படுத்துவதன் மூலம், அமெரிக்காவின் அழுத்தத்தைச் சமன்படுத்த இந்தியா விரும்புகிறது. சீனாவும், அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், இரு நாடுகளும் நெருங்குவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்கா அதிபரின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை, சீனா – இந்தியா இடையே நெருக்கமான நட்பை உருவாக்கி இருக்கிறது,

