திருச்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகில் திமுக அமைச்சர் கே எல் நேருக்கு சொந்தமான பல ஏக்கர் இடம் உள்ளது என்கின்ற விமர்சனம் சமீபத்தில் எழுந்தது. ஆனால் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகில் என்னுடைய பெயரில் எந்த இடம் இருந்தாலும் அரசாங்கம் அதை எடுத்துக் கொள்ளட்டும் என்று அமைச்சர் கே என் நேரு சவால் விடுத்து இருந்தார்
பொதுவாகவே அமைச்சர்கள் தங்களுடைய பெயரில் எந்த இடமும் பெரும்பாலும் பதிவு செய்வது கிடையாது. பினாமி பெயரிலேயே தங்களுடைய சொத்துக்களை வாங்கி குவிக்க கூடியவர்கள். அந்த வகையில் தான் அமைச்சர் கே என் நேரு தன்னுடைய பெயரில் பஞ்சபூர் பேருந்து நிலையம் அருகில் எந்த இடம் இருந்தாலும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளட்டும் என்று தெளிவாக பதில் அளித்திருக்கிறார் என்கிற விமர்சனமும் தற்பொழுது எழுந்துள்ளது.

அதே நேரத்தில் கோவை பேருந்து நிலையம் அருகிலையும் அமைச்சர் கே என் நேருக்கு சொந்தமான இடம் உள்ளது என்று எதிர் கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திமுகவில் மொத்தம் எட்டு மண்டலமாக பிரிக்கப்பட்டு வரும் 2026 தேர்தலுக்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுகவின் தேர்தலுக்கான நிதி தற்பொழுது பதுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஜனவரி மாதத்திற்கு பின்பு தேர்தல் நடத்தை விதிமுறைக்கு வந்து விட்டால் ஆங்காங்கே பணத்தை கொண்டு செல்வதில் மிகப்பெரிய சிரமம் ஏற்படும் என்பதால், இப்போது இருந்தே திமுகவினர் பணத்தை தேர்தல் செலவுக்காக பதுக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சுமார் 30 கண்டெய்னர்களுக்கு மேல் தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள எட்டு திமுக மண்டலங்களில் அந்தந்த பகுதிகளில் சுமார் 5400 கோடி வரை தேர்தல் செலவுக்காக தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு,ஆங்காங்கே பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அமைச்சர்கள் மற்றும் திமுகவினருக்கு சொந்தமான வீடு, கல்லூரி, ஃபார்ம் ஹவுஸ் போன்ற இடங்களில் பணத்தை பதுக்கி வைத்தால் அமலாக்கத்துறை ரைடில் சிக்கிக் கொள்வோம் என்று தற்பொழுது ஒரு புதிய யுக்தியின் மூலம் பணத்தை திமுக பதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவினருக்குள்ளையே முட்டல் மோதல் ஏற்பட்டு,
பணம் பதுக்கப்பட்டுள்ள விவகாரம் திமுகவினர் மூலமாகவே அமலாக்கத்துறைக்கு தகவல் வந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் மத்திய உளவுத்துறை திமுகவினர் எங்கெங்கே பணத்தை கொண்டு பதுக்குகிறார்கள் என்று மிகத் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அப்படி மத்திய உளவுத்துறை மூலம் அமலாக்கத்துறைக்கு செல்லும் தகவலின் அடிப்படையில், தேர்தலுக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் அதிரடி ரைடு நடப்பதற்கான வாய்ப்பு மிக பெரிய அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுவரை இந்திய வரலாற்றிலேயே ரயிலில் இவ்வளவு பணம் சிக்கியது இல்லை என்கின்ற சாதனை படைக்கும் அளவுக்கு தமிழகத்தில் நடக்கும் ரைடு மூலம் பணம் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தற்பொழுது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கிட்னி திருட்டு விவகாரம் என பல பிரச்சனைகள் தலை விரித்து ஆடிக்கொண்டிருகிறது.
இந்த பிரச்சனையெல்லாம் எதிர்கட்சிகள் பட்டியலிட்டு தமிழக ஆளுநரிடம் கொடுத்தால், தமிழக ஆளுநரால் திமுக ஆட்சியை கலைக்க கூட முடியும், அந்த அளவுக்கு திமுக ஆட்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது என்றும் அரசியல் விமர்சனங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

