மது போதை… எல்லை மீறிய நடிகை லட்சுமி மேனன்… தோழியுடன் சேர்ந்து ஒரு இளைஞரை…

0
Follow on Google News

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் திருப்போனித்துரா சுத்துவட்டாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள மதுபான பாருக்கு தனது தோழி உட்பட மூன்று பேருடன் நடிகை லட்சுமி மேனன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு ஐடி ஊழியர், அலிகான் ஷா சலீம் என்பவருக்கும் நடிகை லட்சுமிமேனன் உள்ளிட்ட நான்கு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது கடும் வாக்குவாதம் அவர்களுக்குள் ஏற்பட்டதால் மதுபான பாரில் பரபரப்பு ஏற்பட்டது. மதுபான பாரை விட்டு அவர்கள் வெளியே வந்த பிறகும், தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே தகராறு நீடித்துள்ளது. அப்போது ஐடி ஊழியர் அலிகான் ஷா சலீம் அங்கிருந்து தனது காரில் ஆலுவா நோக்கி சென்றுள்ளார். அப்போது நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்ட நான்கு பேரும் மற்றொரு காரில் அவரது காரை பின்தொடர்ந்து சென்று வழிமறித்துள்ளனர்.

ஐடி ஊழியரிடம் நடுரோட்டில் தகராறு செய்திருக்கின்றனர். அது மட்டும் இன்றி ஐடி ஊழியரை அவரது காரில் இருந்து இறக்கிவிட்டு, தங்களது காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடுமையாக அவரை தாக்கியுள்ளனர். அதன் பிறகு ஒரு இடத்தில் ஐடி ஊழியரை அவர்கள் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து எர்ணாகுளம் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஐடி ஊழியர் அலிகான் ஷா சலீம் புகார் அளித்தார்.

அந்த புகாரில் நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்ட நான்கு பேரும் தன்னை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து எர்ணாகுளம் வடக்கு போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நடிகை லட்சுமிமேனனின் நண்பர்கள் ஐடி ஊழியரை தாக்கியது உறுதியானது.

இதையடுத்து லட்சுமி மேனனின் நண்பர்கள் அனீஸ் மிதுன் மற்றும் தோழி சோனாமோல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர் இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக போலீசார், நடிகை லட்சுமி மேனனை அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகி விட்டார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

தலைமறைவான லட்சுமிமேனன் குறித்து எர்ணாகுளம் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நடிகை லட்சுமிமேனன், கேரளா ஐ கோட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அதில் நடிகை லட்சுமி மேனன், தன் மீது புகார் கொடுத்துள்ள நபர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.

மேலும் முன் ஜாமீன் கேட்டு அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ஐடி ஊழியர் என்னை பாரில் ஆபாச வார்த்தைகளால் திட்டினார். மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.நான் பாரை விட்டு வெளியே வந்த பிறகும் அந்த நபர் காரில் பின் தொடர்ந்து வந்து பீர் பாட்டிலால் என்னை தாக்கினார். ஐடி ஊழியர் கடத்தித் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் புகார் ஜோடிக்கப்பட்டது.

எனக்கும் அந்த குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று நடிகை லட்சுமிமேனன் அதில் கூறியிருக்கிறார். இந்த மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் நடிகை லட்சுமி மேனனை வருகிற செப்டம்பர் 7ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.