மொத்தம் 40 ஷாட் … என் ஆசை நிறைவேறியது … ராபர்ட் மாஸ்டர் குறித்து வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக்…

0
Follow on Google News

சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில் அவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்த படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தில் நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக படத்தின் நாயகனாக நடித்திருந்தார். அடல்ட் கண்டென்ட் நிறைந்த இந்த படம் ரசிகர்களின் மத்தியில் போதிய வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது. பல காட்சிகள் முகம் சுளிக்கும்படியான வசனங்களுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான அனுபவங்கள் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதாவது மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் ஒரு காட்சியில் வனிதா விஜயகுமாரும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் ஒரு காட்சி இருந்தது. அந்த காட்சியில் ராபர்ட் மாஸ்டர் வனிதாவுக்கு தாலி கட்டும் ஷாட் மட்டும் 30 முதல் 40 டேக் எடுக்கப்பட்டது.

பலமுறை முயற்சித்தும் அந்த காட்சி சரியாக அமையவில்லை. அப்போது ராபர்ட் மாஸ்டரின் கைகள் நடுங்கியதால் இயக்குனர் மீண்டும் மீண்டும் டேக் எடுக்க வேண்டியிருந்தது. தாலி கட்டும் காட்சி இப்படியே இழுத்துக்கொண்டே போனதால் ஒரு கட்டத்தில் வனிதா விஜயகுமார் சோர்வடைந்து இருக்கிறார். தயவுசெய்து சீக்கிரம் முடித்து விடுங்கள் என்று ராபர்ட் மாஸ்டரிடம் வலியுறுத்தி கேட்டுள்ளார்.

இந்த அனுபவத்தை பற்றி வனிதா விஜயகுமார் அந்த நேர்காணலில் பேசும்போது, நடிகர் ராபர்ட் மாஸ்டரின் மற்றொரு ஆசையை பற்றிய ஒரு சுவாரசியமான தகவலையும் கூறியிருக்கிறார். அதில் ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு முறை தனது வாழ்வில் தாலி கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. இதற்காக குபேரர் கோவிலில் திருமணம் செய்ய அவர் விரும்பியிருக்கிறார்.

இதுகுறித்து அவரது நண்பர் ஒருவர் முன்பே என்னிடம் தெரிவித்து இருந்தார் ஆனால் நிஜ வாழ்க்கையில் நடக்க வேண்டிய அந்த ஆசை, ஒரு திரைப்படத்தின் மூலம் 40 முறை நிறைவேறியது என்று நடிகை வனிதா விஜயகுமார் காமெடியாக அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். ஒரு திரைப்படத்தில் ஆண் பெண் இருவரும் தம்பதியாக நடிக்கும் போது அந்த உறவின் பிணைப்பு வெளிப்பட வேண்டும் என்பதால் ராபர்ட்டின் ஆசை அந்த காட்சியில் பல டேக்குகள் எடுக்க காரணமாக அமைந்தது என்றும் வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார்.

ஒரு திரைப்படம் ஒருவரின் நிஜ வாழ்க்கையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் போது, சில சமயங்களில் அது தர்மசங்கடமாக இருக்கலாம். ஆனால் அந்த உணர்வை திரையில் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் நடிகை வனிதா விஜயகுமார் அந்த நேர்காணலில் உறுதியாக கூறியிருக்கிறார்.ஆனால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ராபர்ட் மாஸ்டர், மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்துக்கு நீங்கள்தான் படத்தின் டைரக்டர் என்றுதான் தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் அழைத்தார். ஆனால் வெளிநாட்டுக்கு சென்ற பிறகு அவரது மனம் மாறிவிட்டது.

அவர் நான்தான் டைரக்டர் என்று கூறிவிட்டார். பாஸ்போட் தயாரிப்பாளரிடம் சிக்கி விட்டதால் என்னால் பாதியில் திரும்பி வர முடியவில்லை.அதனால் அந்த படத்தில் நான் கதாநாயகனாக நடித்தேன். வனிதா விஜயகுமாரை மாற்ற முடியாது என்று தெரியாது. நாம்தான் மாறிக்கொள்ள வேண்டும் என்று மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடித்தேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

வனிதா விஜயகுமாருக்கு ராபர்ட் மாஸ்டர் தாலி கட்டும் காட்சியில் 30 முதல் 40 டேக் வரை போக காரணம், இது உண்மையாகி விடுமோ என்று அவர் மனதளவில் பீதி அடைந்திருப்பார். அந்த அச்சத்தால் அந்த காட்சியில் தடுமாறி இருப்பார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.