கரூரில் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 40 மேற்பட்டவர்கள் உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் 40க்கு மேற்பட்டவர்கள் உயிர் பிரிய காரணம் ஆளும் திமுக அரசு தான் என தமிழக வெற்றி கழக தொண்டர்கள் குற்றசாட்டுகளை தெரிவித்து வந்தனர். சம்பவ இடத்தில ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, தள்ளுமுள்ளுவிற்கு திடீரென அங்கு ஏற்பட்ட மின் தடையே காரணம் எனச் சொல்லப்பட்டது.
ஆனால், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள மின்வாரியம், விஜய் அங்கு பேசும்போது மின்தடை எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள மின் வாரியம். விஜய் பேசும்போது மின்சாரம் முழுமையாக இருந்தது என்றும் அருகே இருந்த கடைகளில் விளக்குகள் எரிந்து கொண்டு இருப்பதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது என்றும் எனவே மின்தடை என்பது பொய்யான தகவல் என மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தின் போது மக்கள் கூட்டம் அதிகரிக்க கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் நிற்க இடம் இல்லாமல் மரங்களில் ஏறத் தொடங்கினர். 100 அடி சாலையில் 60 அடி நீள பேருந்து நுழைந்த போது நெருக்கடி இன்னும் அதிகரித்தது. இதனால் விஜய் ரசிகர்கள் பலர் அங்கே இருந்த ஜெனரேட்டர் அறைக்குள் சென்றனர். சாலையோரம் இருந்த ஜெனரேட்டர்கள் அறைக்குள் சென்றனர். அங்கே டீசல் கேன்கள் இருந்தன.
இதனால் அசம்பாவிதத்தை தடுக்க வேண்டும் என்று விஜய்யின் பயணத்தை ஏற்பாடு செய்த தவெக குழுவை சேர்ந்தவரே ஜெனரேட்டரை ஆஃப் செய்ததாக கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தான் பாதுகாப்பு கருதி ஜெனரேட்டரை நிறுத்தினார் என கூறப்படுகிறது, இந்நிலையில் ஜெனரேட்டர் ஆபரேட்டிங் ரூமுக்குள் பலர் புகுந்தபோது, ஆபரேட்டர் ஜெனரேட்டரை ஆஃப் செய்தார் என்பதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளதாகவும்,
ஜெனரேட்டர் ஆபரேட்டராக பணியில் இருந்தவரிடம் போலீசார் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வெளியூரில் உள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்திய கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஹேமமாலின் எம்.பி. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கரூர் வந்து சம்பவ இடத்தில் ஆய்வை மேற்கொண்டது, இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை ஹேமமாலின் எம்.பி. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழு தொடர்புகொண்டபோதும், அவர்கள் சந்திப்பை மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து, அந்த இரு அதிகாரிகளுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும் என பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில் ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் எங்கள் குழுவுடன் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது. ஆனால் பலமுறை அழைப்பு விடுத்தும் அவர்கள் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர்.
இதனால் எங்கள் 8 எம்.பி.க்கள் இணைந்து உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம்” என பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி சூர்யா. இந்நிலையில் கரூர் விவகாரத்தில் ஹேமமாலின் எம்.பி. தலைமையிலான குழுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சந்திக்க மறுத்துள்ள விவகாரம், எதற்காக சந்திக்க மறுக்கிறார்கள் என மக்கள் மத்தியில் மிக பெரிய பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

