புதிய அரசியல் கட்சி தொடங்கி 2026 சட்டசபை தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கும் விஜய்க்கு, அரசியல் என்பது கலவர பூமி, இது சினிமா இல்லை என்று உணர்த்திய சம்பவம் தான் விஜய் பங்கேற்ற கரூர் நிகழ்வு. குறிப்பாக விஜயின் அரசியல் வருகை திமுகவுக்கு மிக பெரிய பாதகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம், அதிலும் விஜய் பனையூரை விட்டு வெளியே வரமாட்டார், இவர் எப்படி அரசியல் களத்தில் ஜொலிப்பர் என்று விமர்சனம் இருந்து வந்த நிலையில்,
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு ஊருக்கு வந்து மக்களை சந்திக்க போகிறேன் என விஜய் அறிவித்து, அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்ற இடமெல்லாம் திமுக கோட்டை என்று வர்ணிக்கப்படும், தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், கரூர், இதில் தஞ்சாவூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணர் கோட்டை , திருச்சி கே என் கோட்டை, கரூர் செந்தில் பாலாஜி கோட்டை என்கிற பிம்பம் சல்லி சல்லியாக உடைக்கும் வகையில் இருந்தது விஜய்க்கு கூடிய மக்கள் கூட்டம்.

இந்நிலையில் விஜய் அரசியல் பயணத்துக்கு மிக பெரிய தடைக்கல்லாக அமைந்த கரூர் சம்பவம் தான் தமிழக அரைசியலில் திருப்பு முனையாக, ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும் சம்பவமாக மாறி உள்ளது. கரூர் சபவத்திற்கு பின்பு அமைதியாக இருந்த விஜய், அடுத்த 34 மணி நேரம் கழித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதில் முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிராக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் கரூர் சம்பவத்துக்கு பின்பு தன்னுடைய முதல் எதிரி, ஒரே எதிரி திமுக மட்டும் தான் என்பதை முடிவு செய்துவிட்டார் விஜய் என்றும், அதற்கு முன்பு அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்கிற நிலையில் இருந்த விஜய் கரூர் சம்பவத்துக்கு பின்பு இனி ஒரே எதிரி திமுக தான் என்பதை பிக்ஸ் செய்து வைத்துள்ள விஜய், பாஜக ஏற்கனவே திறந்து வைத்து இருந்த கூட்டணி கதவுக்கு தற்போது க்ரீன் சிக்கனல் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் சம்பவம் அரங்கேறிய அடுத்த நாளே பாஜக தரப்பிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார் விஜய். பாஜகவுக்கு உங்களுக்கு இந்த நேரத்தில் பக்க பலமாக இருப்போம் என்று உறுதி அளித்து இருக்கிறது. கரூர் சம்பவத்தை மொத்தமாக விஜய் பக்கம் திருப்பலாம் என்கிற திட்டத்தை முறியடிக்கும் வகையில் உடனே பாஜக எம்பி ஹேமா மாலினி தலைமையில் குழு அமைத்து கரூர் அனுப்பியது பாஜக தலைமை.
இதனை தொடர்ந்து விஜய் தரப்பு டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா தரப்பை சந்தித்து பேசி இருக்கிறது, இரண்டு தரப்பும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு அமித்சா நேரடியாக விஜயிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் கைகோர்த்தால், மிக எளிதாக திமுகவை வீழ்த்தி விடலாம் என அமித்ஷா தெரிவித்து இருக்கிறார்.
மேலும் மகாராஷ்டிரா மாடல் போன்று அதிமுக சார்பில் முதல்வர், விஜய்க்கு துணை முதல்வர், மேலும் பாஜகவில் இருந்து ஒருவருக்கு துணை முதல்வர், கூட்டணியில் இடம்பெற இருக்கும் கட்சிகள் அமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வது என அமித்சா சொன்னதுக்கு விஜய் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கரூர் நிகழ்வின் போது திமுக அரசு நடந்து கொண்ட விதம் குறித்து பல குற்றசாட்டுகளை அமித்ஷாவிடம் பகிர்ந்து இருக்கிறார் விஜய்.
பொறுமையுடன் கேட்டு கொண்ட அமித்ஷா, உரிய விசாரணை நடத்தபடும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவை டெல்லியில் உள்ள முக்கிய பாஜக தலைவர் ஒருவரை சந்தித்து மற்ற விஷயங்கள் குறித்து பேச டெல்லிக்கு விஜய் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

