கரூர் சம்பவம் இந்தியாவே உலுக்கி இருக்கும் நிலையில், மத்திய பாஜக சார்பில் எம்பி குழு கரூர் வந்து ஆய்வு செத்தது, இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கரூர் விவகாரத்தில் எம்பி குழு அடுத்து என்ன செய்ய இருக்கிறது, மத்திய அரசு இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பது குறித்து பாஜக தரப்பில் விளக்கம் கொடுக்க பட்டுள்ளது.
அதில் கரூரில் 41 பேர் உயிர் பலியான கோர சம்பவத்தின் வலி, வேதனை குறித்து அறியாமல், சட்டத்தை வளைக்கும் வகையில், எதுவுமே நடக்காதது போல், நடந்து சம்பவத்தை திசை திருப்பும் முயலும் அரசியல்வாதியின் சுயநல, பண பல, கிரிமினல் அரசியலையும், தமிழக மக்களுக்கு திமுக செய்து வரும் துரோகத்தையும் பாஜக வெளிச்சத்துக்கு கொண்டுவரும் என தெரிவித்துள்ள பாஜக.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வழிகாட்டுதலில் தமிழக வந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிகள் குழு விரைவில் தன்னுடைய அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலில் தமிழக அரசின் தமிழக காவல்துறையின் நிர்வாக சீர்கேடுகள் குறித்த நீதி விசாரணை நடக்கும் என தெரிவித்துள்ள பாஜக.
மேலும் 41 பேர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசியல் சதி உள்ளது உள்ளூர் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்த தமிழக வெற்றிக் கழகத்தின் குற்றச்சாட்டின் பின்னணி குறித்து உண்மைகளை வெளிக்கொணரவும், தவறுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் சிபிஐ விசாரணை அமையும் வரை பாஜக போராடும் என்றும்,
நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் , காவல்துறையும் ஒரு பக்கம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி பயங்கரமான பதட்டத்துடன், பொய்யான கருத்துக்களை நடந்த சம்பவத்தின் உண்மை பின்னணி குறித்து திசை திருப்பும் வகையில், தமிழக வெற்றி கழகம் கூறியது எல்லாம் வதந்தி என்று அவசர அவசரமாக கூற வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ள பாஜக.
கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில் விசாரணை ஆணையத்தின் செயல்பாடுகளை தடுக்க முயல்வது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாஜக.
கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து 66 பேர் பலியான போது, தமிழக முதல்வர் கருணையுடன் பாதிக்கப்பட்ட “கருணாபுரம்” சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க வேண்டும் என்று பாஜக வேண்டுகோள் விடுத்த பொழுது அங்கு போகாத முதலமைச்சர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது,
உடனடியாக முதல்வர் நேரில் செல்ல வேண்டும் என்று பாஜக வேண்டுகோள் விடுத்தும் அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தி கூட்டணி தேர்தல் பேரங்களுக்கு மட்டும், அரசியல் சுயலாபத்துக்காக டெல்லி சென்ற முதலமைச்சர், தற்போது மட்டும் இரவோடு இரவாக, இருளோடு இருளாக கரூர், வேலுசாமிபுரத்திற்கு ஓடோடி வந்ததன் பின்னணி குறித்து செந்தில் பாலாஜி ஏன் பேசவில்லை? தன்னை உயிரினும் மேலாக காக்கும் முதல்வரை, காட்டிக் கொடுக்க மறுப்பது நியாயம் தானே? என கேள்வி எழுப்பியுள்ளது பாஜக.
இந்நிலையில் தமிழகம் வந்த பாஜக எம்பிகள் குழு விரைவில் தன்னுடைய அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலில் நீதி விசாரணை நடக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் இந்த விவகாரம் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

