தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கு மேற்பட்டவர்கள் உயிர் இழந்த சம்பவம், இந்தியா அரசியலையே தமிழகம் பக்கம் திருப்பி இருக்கிறது. தவெக உட்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கரூரில் நடந்த இந்த சம்பத்துக்கு ஆளும் திமுக அரசு தான் என பகிரங்கமாக குற்றசாட்டுகளை வைத்து வரும் நிலையில், திமுக தரப்பு விஜய் பக்கம் குற்றசாட்டுகளை வைத்து வருகிறது.
இந்த விவகாரம் தேசிய அளவில் பேசும் பொருளாக ஆனதை தொடர்ந்து , பாஜக எம்பி குழு கரூர் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தது, இதனை தொடர்ந்து பாஜக எம்பி குழு ஆளும் திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை தெரிவித்தவர்கள், சிபிஐ விசாரணைக்கு இதை எடுத்து செல்வோம் என தெரிவித்தனர், இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த 34 மணி நேரம் கழித்து விஜய் வீடியோ ஒன்ற வெளியிட்டார்.

அந்த வீடியோவில் மறைமுகமாக திமுகவுக்கு எதிராக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார் விஜய், இந்த பரபரப்புக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தானாக முன்வந்து பேட்டி கொடுத்தது, தற்பொழுது அவருக்கே அது சிக்கலாக உருவாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. செந்தில் பாலாஜி அளித்த அந்த பேட்டியில், வேலுச்சாமிபுரத்தில் 2000 செருப்புகள் வீதியில் கிடந்தன, காலி தண்ணீர் பாட்டில் ஒன்றாவது நீங்கள் பார்த்தீர்களா? இதிலிருந்தே தெரிகிறது, மக்களுக்கு குடிநீரோ, பிஸ்கட் பாக்கெட்டோ வழங்கப்படவில்லை என தெரிவித்த செந்தில் பாலாஜி.
விஜய், அன்று குறித்த நேரத்தில் வந்திருந்தால் பிரச்னையே நடந்திருக்காது. விஜய் பேசத் தொடங்குவதற்கு முன்பே அங்கு நிலைமை மோசமடைந்துவிட்டது, அவர் கவனத்தை ஈர்க்கவே செருப்பு வீசப்பட்டிருக்கலாம் என செந்தில்பாலாஜி கொடுத்த பேட்டி மிக பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக அவருடைய பேட்டியே கரூர் விவகாரம் அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது. செந்தில் பாலாஜி பேட்டி குறித்து பாஜக தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய், குறித்த நேரத்திற்கு வராததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது. அன்று மாலை 4 மணிக்கு விஜய் வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது மற்றும் விஜய் மீது செருப்பு வீசியது ஏன்? என்பதற்கு புது விளக்கமும், என்று செந்தில் பாலாஜி புதுவிதமான தீர்ப்பு எழுதி உள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள பாஜக.
ஜெனரேட்டர் ஆப் செய்யப்பட்டது ஏன்? கூட்ட நெரிசல் அதிகமாகும் போது, ஜெனரேட்டர் அறை தடுப்புகளை உடைத்து தமிழக வெற்றி கழகத்தினர் விழுந்ததால் தான் விபத்து ஏற்பட்டது என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதை சுட்டி கட்டியுள்ள பாஜக, மேலும் காலி தண்ணீர் பாட்டில் ஒன்றாவது நீங்கள் பார்த்தீர்களா? தண்ணீர் பாட்டில் கொடுக்காதது தான் விபத்துக்கு முக்கிய காரணம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி, திமுக அரசும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தன் கடமையை சரியாக செய்தது.
ஆனால் தமிழக வெற்றி கழகம் தனது கடமையை சரிவர செய்யாததால் தான் விபத்து ஏற்பட்டது என்று புதுப்புது வடிவங்களில் பல்வேறு அர்த்தங்களில், உண்மையை மறைக்கும் வகையில் அவராகவே உருவாக்கிய கேள்வி பதில் வடிவமான பல்வேறு கற்பனைக் கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி அளித்த கிரிமினல் விளக்கத்தையும் எதிர்காலத்தில் சிபிஐ விசாரணையில் சொல்ல வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.
அதாவது செந்தில் பாலாஜி கொடுத்த பேட்டியின் அடிப்படையில், செந்தில் பாலாஜியிடமே சிபிஐ விசாரணையை தொடங்கலாம் என்றும் அதற்கான ஏற்பாடுகளை பாஜக செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

