கரூரில் நடந்த சம்பவத்திற்கு பின்பு பனையூர் வீட்டிலே முடங்கிய விஜய், அங்கிருந்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் கரூர் நிகழ்வு குறித்து தொலைபேசியில் பேசி தெரிந்து கொண்டு இருந்துருகிறார், அதற்கு கரூரில் நடந்த அந்த துயர சம்பவத்தின் போது, உடனே விஜய் சென்னை திரும்பியது சரி, ஆனால் தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டிய கடமை விஜய்க்கு இருக்கிறது, குறிப்பாக விஜய் அறிவித்த நிவாரணத்தை, விஜய்யே பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கொடுக்க வேண்டும் என விஜய்க்கு நெருக்கமானவர்கள் விஜயிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து பனையூரில் இருந்து பட்டினப்பாக்கம் சென்ற விஜய், அங்கிருந்து கரூர் விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார், இதனை தொடர்ந்து பட்டினப்பாக்கம் அலுவலகத்திற்கு ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கிய சாமி, புஸ்ஸி ஆனந்த் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் விஜய். அப்போது தான் கரூர் செல்ல இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும் விஜய் தெரிவித்து இருக்கிறார்.

அதற்கு ஆதவ் அர்ஜுனா, மற்றும் ஜான் ஆரோக்கிய சாமி இருவரும் நீங்கள் வெளியிட்ட வீடியோ மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகியிருக்கு, திமுகவுக்கு எதிராகவும், நமக்கு ஆதரவான மனநிலையில் மக்கள் உங்கள் வீடியோவ பார்த்த பின்பு உள்ளனர். இப்படி ஒரு சூழலில் நீங்கள் கரூர் செல்வது சரியாக இருக்காது என ஆதவ் அர்ஜுன் மற்றும் ஜான் ஆரோக்கிய சாமி இருவரும் விஜய்யிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆதவ் அர்ஜுன், நீங்கள் மீண்டும் கரூர் சென்றால் திமுகவினர் மக்களை தூண்டி விட்டு உங்களுக்கு எதிரான சில விசயங்களை செய்யலாம் அதனால் கரூர் செல்ல வேண்டாம் என விஜய் கரூர் செல்வதற்கு முட்டு கட்டை போட்டிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. இதனை தொடர்ந்து Bascat Ball ஆல் இந்தியா ப்ரெசிடெண்டாக தான் இருப்பதால், அது தொடர்பாக உடனே டெல்லி செல்ல வேண்டும் என, ஒரு இக்கட்டான சூழலில் விஜய்யை அம்போ என்று விட்டுவிட்டு டெல்லிக்கு எஸ்கேப் ஆகி இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
இதன் பின்பு ஆதவ் அர்ஜுனா குறித்து தனக்கு நெருக்கமான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மூலம் விஜய்க்கு ஒரு தகவல் சென்று இருக்கிறது. அதில் ஆதவ் அர்ஜுனா உங்களை பாஜக உடனே கூட்டணி அமைக்க விடாமல், திமுகவுக்கு உதவி செய்து வருகிறார், குறிப்பாக கரூர் விவகாரத்தில் விஜய் நேரில் சென்றால், ஆளும் அரசுக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவான ஒரு சூழல் உருவாகும் என்பதால் விஜய்யை கரூர் க்கு செல்ல விடாமல் ஆதவ் அர்ஜுன் தடுக்கிறார் என்றும்,
குறிப்பாக விஜய் கரூர் க்கு நேரில் செல்லாதது, விஜய் பாதிக்கப்பட்ட மக்களை எட்டி கூட பார்க்கவில்லை என்கிற ஒரு தோற்றம் மக்கள் மத்தியில் உருவாகும், இதனால் கரூர் விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக இருக்கும் மக்கள் கூட , ஆளும் கட்சி மீதான எதிர்ப்பை மறந்து விஜய்க்கு எதிராக திரும்புவார்கள் என்பதால் விஜய்யை கரூர் செல்ல விடாமல் தடுத்து வருகிறார் ஆதவ் அர்ஜுன் என்கிற தகவல் விஜய்க்கு நெருக்கமான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மூலம் சென்று இருக்கிறது.
இந்நிலையில் திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் பாஜக உதவி தேவை என்பதை நன்கு உணர்ந்த விஜய், பாஜக சார்பில் ஏற்கனவே விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பவன் கல்யாண் உடன் மீண்டும் கூட்டணி குறித்து கூட்டணி குறித்து பேச்சுவார்தையை விஜய் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆதவ் அர்ஜுனா கூட இருந்தே தனக்கு குழி பறிக்க திமுகவால் அனுப்பப்பட்ட ஸ்லீப்பர் செல்லாக இருக்கலாம் என்கிற சந்தேகம் விஜய்க்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

