விஜய் – அமித்ஷா 10 நிமிட பேச்சு… அமித்ஷா கொடுத்த வாக்குறுதி… உறுதியானது கூட்டணி..

0
Follow on Google News

கரூர் துயர சம்பவத்திற்கு பின்பு மனதளவில் மிக பாதிக்கப்பட்ட விஜய், வெளியில் வராமல் வீட்டிலே முடங்கி இருக்கிறார். இருந்தாலும், வீட்டில் இருந்த படியே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விஜய் திட்டமிட்டு வரும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கரூர் சம்பவத்துக்கு பின்பு தமிழக வெற்றி கழகத்தை முடங்கி விட வேண்டும் என்கிற நோக்கில், அந்த கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கைது செய்து வருகிறது திமுக அரசு என்கிற குற்றசாட்டுகளை தவெகவினர் வைத்து வருகிறார்கள்.

தன்னுடைய கட்சி நிர்வாகிகளை கூட காப்பாற்ற முடியாத ஒரு சூழலில் இருக்கும் விஜய்க்கு தற்பொழுது மத்திய பாஜக அரசின் உதவி கட்டாயம் தேவை என்கிற சூழல் உருவாகி இருக்கிறது. அதே நேரத்தில் கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து திமுக அரசு போன்று, பாஜக அரசும் இறங்கி விஜய் எதிராக அடிக்க தொடங்கினால் விஜய்யின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.

ஆனால் கரூர் நிகழ்வுக்கு உடனே பாஜக எம்பிக்கள் குழு ஒன்றை அமைத்து கரூர் அனுப்பி வைத்து அங்கே ஆய்வு செய்தபின்பு, தவெக வுக்கு ஆதரவாகவும், திமுக அரசுக்கு எதிராகவும் பாஜக எம்பி குழு பேட்டி கொடுத்தது மட்டுமின்றி, அடுத்தடுத்து அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கையில், அது விஜய்க்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் தான் இருக்கிறது என்பதை கணிக்க முடிகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் நேரடியாக அமித்சா உடன் பேசுவதற்கு முயற்சித்து இருக்கிறார், ஏற்கனவே பாஜக தரப்பில் கூட்டணிக்காக விஜய் உடன் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் பேசி வரும் நிலையில், பவன் கல்யாணிடமே தான் அமித்ஷாவிடம் பேச வேண்டும் ஏன் விஜய் தெரிவித்து இருக்கிறார், உடனே பவன் கல்யாண் ஏற்பாட்டில் அமித்ஷா – விஜய் இருவரும் தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள்.

சுமார் 10 நிமிடம் வரை விஜய் – அமித்ஷா இருவரும் தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள், அப்போது கரூர் சம்பவத்துக்கு திமுக அரசு தான் காரணம் என அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை அடுக்கி இருக்கிறார் விஜய். மேலும் கரூர் பிரச்சனைக்கு பின்பு தவெக நிர்வாகிகளுக்கு ஆளும் தரப்பினர் கொடுத்து வரும் நெருக்கடி, போன்ற அனைத்தையும் விஜய் அமித்சாவிடம் தெரிவிக்க.

அதற்கு அமித்ஷா , டோன்ட் வோரி விஜய், நான் உங்க கூட இருப்பேன், எல்லாம் நான் பார்த்துகிறேன் என்று அமித்ஷா சொன்னதும், பதிலுக்கு ரெம்ப நன்றி என்று விஜய் தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து ஆளும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், கரூர் சம்பவத்துக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும், அதற்கு பாஜக உடன் கூட்டணி வைத்தால் மட்டுமே முடியும் என்கிற மனநிலைக்கு வந்து இருக்கிறார் விஜய் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அமித்ஷா உடன் விஜய் பேசிய பின்பு, அடுத்து இரண்டு முறை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார் விஜய், பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என வெளிப்படையாகவே பவன் கல்யாணிடம் பேசிய விஜய், ஆனால் கூட்டணி உறுதியாவதற்கு முன்பு எத்தனை தொகுதி, மற்றும் அமைச்சரவையில் பங்கு ஆகியவற்றை இறுதி செய்ய வேண்டும் என விஜய் பவன் கல்யாணிடம் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் அடுத்த ஒரு மாதத்திற்குள் தவெக – பாஜக – அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டும் என்கிறது டெல்லியில் இருந்து வரும் தகவல். இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக இணைந்தால் திமுகவை மிக எளிதாக வீழ்த்தி விடலாம் என்கிறது தமிழக அரசியல் கள நிலவரம்.