அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால், திருப்புர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கு மிக பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்க சந்தையை மட்டும் நம்பியில்லாமல், உடனே இங்கிலாந்து, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40 நாடுகளுடன் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது மத்திய பாஜக மோடி அரசு.
மேலும் அமெரிக்க புதிய வரி விதிப்பால், தொழிற்சாலைகள் எந்த விதத்தில் முடங்கி விடாமல் இருக்க, பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் வரை வரி விலக்கு கொடுத்து இருக்கிறது மத்திய பாஜக அரசு, மேலும் குறைந்த விலை ஆடைகளுக்கு 12% ஜிஎஸ்டி யில் இருந்து 5% மாக குறைத்து , நெருக்கடி சூழல் இருக்கும் திருப்பூர் ஜவுளி தொழிற்ச்சாலைகளை கண் இமைபோல் காத்து வருகிறது மத்திய பாஜக மோடி அரசு.

மேலும் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பாஜக மோடி அரசால் சுமார் 5 லட்சமா பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் புதிய ஜவுளி பூங்கா கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இப்படி மத்திய பாஜக அரசு தமிழகத்தில் உள்ள ஜவுளி தொழிசாலைகளுக்கு தேவையான அணைத்து சலுகைகளையும் வழங்கி, அமெரிக்க புதிய வரி விதிப்பில் இருந்து எந்த வகையிலும் தமிழகத்தில் உள்ள ஜவுளி தொழிசாலைகள் பாதிப்புக்கு உள்ளாகி கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ஜவுளி துறையின் ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்து வருவதால், உற்பத்தி அளவுக்கு குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான தொழிலார்கள் வேலை இழக்கும் அபாயம் உளளதாகவும், கடிதம் மூலம் தெரிவித்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நெருக்கடியை சரி செய்யவேண்டும் என தெரிவித்து இவர்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.
இந்நிலையில் அமெரிக்கா புதிய வரிவிதிப்பால் தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி தமிழக்த்திற்கு மட்டுமில்லை, இந்தியா முழுவதும் இந்த நெருக்கடி உள்ளது, ஆனால் இந்தியாவில் உள்ள மொத்த ஜவுளி ஏற்றுமதியில் திருப்பூர் மட்டும் சுமார் 60 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் ₹45,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி செய்துள்ள நிலையில் அமெரிக்க வரி விதிப்புகளால்
₹15,000 கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இருந்தும் மத்திய பாஜக அரசு மிக துரிதமாக செயல்பட்டு பருத்திக்கு வரி விலக்கு, ஜிஸ்டி குறைப்பு, உடனே இங்கிலாந்து, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40 நாடுகளுடன் புதிய சந்தை வாய்ப்புகள் ஒரு பக்கம் துரிதமாக மத்திய பாஜக அரசு செய்லபட்டு கொண்டிருக்க, மறுப்பக்கம், மாநிலத்தில் ஆளும் திமுக அரசு தொழில் துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆண்டு தோறும் மின்சார உயர்வு, குறிப்பாக தற்பொழுது நெருக்கடியான சூழலில் இருக்கும் திருப்பூர் ஜவுளி தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தில் விலக்கு அளிக்க வேண்டிய திமுக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, இதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பது போன்று நெருக்கடி வந்தால் மத்திய அரசு காரணம், வளர்ச்சி என்றால் அதற்கு ஆளும் திமுக அரசு தான் காரணம் என்கிற தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாக தான் பிரதமர் மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் எழுதிய கடிதம் அமைத்துள்ளது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
குறிப்பாக பிரதமருக்கு கடிதம் எழுதும் முதல்வர், தற்பொழுது நெருக்கடியில் இருக்கும் திருப்பூர் ஜவுளி தொழிசாலைகளுக்கு மின்சாரத்தில் விலக்கு அளித்து அவர்களின் நெருக்கடி சுமையை குறைக்குமா .? என கேள்வி எழுந்துள்ளது குறிப்பிட்டதக்கது.

