சாமி கும்பிட அனுமதி மறுப்பு… விடிய விடிய நடந்த போராட்டம்… பாஜக உடன் கை கோர்த்த திருப்பரங்குன்றம் பொதுமக்கள்..

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் கடந்த ஒரு வருடமாக மிக பெரிய அளவில் பரபரப்பை ஏற்ப்படுத்தி வரும் நிலையில், தற்பொழுது உயர்நீதிமன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாத திமுக அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் கடும் எதிப்பு அலை உருவாகி வருகிறது. குறிப்பாக இதுவரை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தான் தேவையில்லாமல் இந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்குகிறது என ஆளும் தரப்பு குற்றசாட்டுகள் பொய்த்து போகும் வகையில் பாஜக உடன் திருப்பரங்குன்றம் வாழ் பொதுமக்களும் கை கோர்த்துள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சமீபத்தில் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்த திமுக அரசு, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தன கூடு நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்துள்ளது, அதற்கான கொடி ஏற்றம் நிகழ்வில் இரவில் சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் பாஜக சிறுபான்மை அணியை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் கடந்த டிசம்பர் 24ம் தேதி திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோவில் வழியாக மலையில் ஏறி தர்காவில் வழிபட முயற்சித்தார்.

அப்போது போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். வேலூர் இப்ராஹிம் உடன் பாஜக மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் உட்பட பாஜகவினர் பலரும் உடன் இருந்தனர். மலை மீது உள்ள தர்கா வில் வழிபட்டு பின்பு காசி விஸ்வநாதர் கோவிலிலுக்கும் செல்ல இருப்பதாக போலீசாரிடம் பாஜகவினர் தெரிவித்தனர். அதற்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மலை ஏறுவதர்க்கு அனுமதி என்பதால், தற்பொழுது சுமார் 7 மணி ஆகிவிட்டது என போலீசார் தெரிவித்தனர்.

அதற்கு வேலூர் இப்ராகிம் சமீபத்தில் தர்காவில் கொடி ஏற்றும் நிகழ்வுக்கு மட்டும் இரவில் இப்படி அனுமதித்தீர்கள் , அதே போன்று எண்களையும் அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்க அதற்கு போலீசார் அது அவர்களின் பாரம்பரிய நடைமுறை படி, இரவு நேரத்தில் நடக்கும் நிகழ்வு அதனால் நாங்கள் அனுமதித்தோம் என போலீசார் தெரிவிக்க அதற்கு, அப்படியானால் எங்களுடைய பாரம்பரிய முறையான சிவராத்திரி அன்று எதற்க்காக மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபட எங்களை அனுமதிக்கவில்லை என சிவலிங்கம் போலீசாரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அதாவது கடந்த ஜனவரி மாதம் திமுக கூட்டணி கட்சி எம்பி நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலைக்கு வந்தபோது அவருடன் வந்தவர்கள் மலையில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் வெளியாகி தமிழகம் முழுவதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது, இதனை தொடர்ந்து அடுத்து பிப்ரவரி மாதம் நடந்த சிவராத்திரி தினம் அன்று மதுரை பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் உட்பட பாஜகவினர் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வழிபட சென்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அதாவது பழனியாண்டவர் கோவில் வழியாக செல்லும் பாதையில் செல்ல கூடாது, மலைக்கு பின்புறம் உள்ள வழியாக மேலை ஏறி சொல்லுங்க என போலீசார் தெரிவிக்க, பழனியாண்டவர் கோவில் வழியாக செல்வது தான் வழக்கம் , இதுவழியாக தான் செல்வோம் என்றார், இப்படி சிவராத்திரி தினம் அன்று விடிய விடிய பழனியாண்டவர் கோவில் முன்பு காத்திருந்த பாஜக மாவட்ட தலைவர் சிவலிங்கம் காலை 6 மணிக்கு தான் பழனியாண்டவர் கோவில் வழியாக மேலே செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதை சுட்டி காட்டி தான் சமீபத்தில் வேலூர் இப்ராகிம் வந்த போது போலீசாரிடம், தர்காவுக்கு பராமப்ரியம் படி நீங்கள் இரவில் அனுமதித்தீர்கள், என்னை ஏன் சிவராத்திரி அன்று எங்கள் பாரம்பரியம் படி இரவில் வழிபட அனுமதிக்கவில்லை என போலீசாரிடம் சரமாரியாக சிவலிங்கம் கேள்வி எழுப்பினர். இந்த பரபரப்பான நிகழ்வில் திருப்பரங்குன்றம் பகுதியில் இருக்கும் பொதுமக்களும் பாஜகவுடன் கைகோர்த்து நின்ற நிகழ்வு, தற்பொழுது பொதுமக்கள் மத்தியிலும் கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருவதை பார்க்க முடிகிறது.