கருணையில்லாத திமுக அரசு… கடவுள் போல் தமிழகத்தை காப்பாற்றியவர்கள்… இன்று உரிமைக்காக வீதியில் இருக்கும் அவலம்..

0
Follow on Google News

கடந்த 2020ம் ஆண்டு கொரோன பேரிடரை எதிர்கொள்ள தமிழக அரசு சுமார் 2,400 செவிலியர்களை மாதம் ₹14,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. அந்த காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து செவிலியர்கள் பணியாற்றியது தமிழகமே அவர்களுக்கு நன்றி கடன் பெற்று இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, “ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள்” என்று வாக்குறுதி எண் 356-ஆக திமுக அதன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து ஆட்சியை பிடித்து 2021 பதவியேற்ற திமுக அரசு கடந்த 2022 டிசம்பர் மாதம் கொரோனா காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட செவிலியர்களின் ஒப்பந்தம் ரத்து என செவிலியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக செய்யப்பட்ட திமுக அரசை எதிர்த்து செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர், மேலும் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, “சம வேலைக்கு சம ஊதியம்” வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்க உத்தரவிட்டது. மேலும் கடந்த 2024ம் ஆண்டு மற்றொரு தீர்ப்பில், 18,828 புதிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் சமீப காலமாக திமுக அரசுக்கு எதிராக செவிலியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், கடந்த டிசம்பர் 18 தேதி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் திமுக அரசுக்கு எதிராக கொந்தளிப்பை ஏற்படுத்தியது, மேலும் செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவும் பெருகி வருகிறது.

இதனை தொடர்ந்து அரசு தரப்பில் நடந்த பேச்சுவார்தையில், திமுக அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது, அதில் 723 செவிலியர்கள் பொங்கல் பண்டிகை 2026க்குள் நிரந்தரம். 750 புதிய பணியிடங்கள், ஊதியம் ₹18,000 ஆக உயர்வு, ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு என திமுக அரசு வெளியிட்ட அறிவுப்புகளை போரட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் ஏற்க்க மறுத்து விட்டனர்.

திமுக அரசின் இந்த அறிவிப்பு, புதிய பணியிடங்கள் இல்லை, பழைய காலியிடங்களை நிரப்புவது மட்டும், என்று செவிலியர் சங்கங்கள் அரசு அறிவிப்புகளை நிராகரித்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் செவிலியர்களுக்கு ஆதரவாக திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என செவிலியர்களுக்கு அதரவு குரல் கொடுத்து இருக்கிறார்.

இந்நிலையில் தொடர்ந்து செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், அல்லது அரசியல் ரீதியாக திமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டால் மட்டுமே செவிலியர்களின் போராட்டத்திற்கு விடிவு பிறக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கொரோன பேரிடர் காலத்தில் தமிழகத்தை காவல் செய்வமாக கைப்பற்றிய செவிலியர்கள் இன்று வீதியில் இறங்கி அவர்களின் உரிமைக்காக போராட்டம் நடந்தும் அவலம்நிலைக்கு ஆளும் திமுக அரசு தள்ளி இருக்கிறது என மன வேதனையை பகிர்கிறார்கள் பொதுமக்கள்.