மதுரையில் உள்ள 10 சட்டசபை தொகுதியில் மதுரையில் மத்தியில் உள்ளது மதுரை மத்திய தொகுதி, சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைத்திருக்கும் இந்த மதுரை மத்திய தொகுதி, மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் மிக சிறிய தொகுதியும் கூட. வர்த்தக தொடர்பாக கடைவீதிகள் அதிகம் உள்ள மதுரை மத்திய தொகுதி முழுவதும் நகர் புரம் சார்ந்த தொகுதி.
மதுரையில் உள்ள மற்ற 9 தொகுதிகள் குறிப்பிட்ட ஒரு சமூகம் அந்தந்த தொகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், மதுரை மத்திய தொகுதியில் அணைத்து தரப்பு சமூகமும் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த இரன்டு சட்டசபை தேர்தலில் தொடர் வெற்றியை பெற்று வரும் அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன், மீண்டும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்கான கள சூழல் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தொகுதி மக்கள் மத்தியில் அமைச்சர் PTR மீது நன்மதிப்பு தொடர்கிறது. அதே வேளையில் மாநகராட்சியின் செய்லபாடுகள் மத்திய தொகுதி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதை பார்க்க முடிகிறது. மேலும் திமுக அரசின் இலவச பட்டா, இலவச பேருந்து போன்ற திட்டத்தில் மதுரை புறநகர் பகுதியில் அதிக அளவில் மக்கள் பயன் அடைந்திருந்தாலும் கூட மிக குறைந்த அளவு மக்களே மதுரை மத்திய தொகுதியில் உள்ள மக்கள் பயன் அடைந்துள்ளார்கள்.
கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு சட்டசபை தேர்தல்களிலும், திமுக முழுவதும் உள்ள தொகுதிகளில் மதுரை மத்திய தொகுதியில் மட்டுமே ஓட்டுக்கு காசு கொடுக்காமல் அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றார் என்கிற பெருமைக்கு முக்கிய காரணம், இந்த தொகுதி வர்த்தகம் நிரைந்த தொகுதி என்பதால், இந்த தொகுதி மக்கள் வாக்குக்கு பணத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் இந்த தொகுதியில் தெற்கு வாசல், மகாபூபாளையம் போன்ற பகுதிகளில் இஸ்லாமிய சமூகத்தினர் கணிசமாக இருப்பதால், அவர்களின் வாக்குகளை பெருமளவு கடந்த இரன்டு தேர்தல்களில் அறுவடை செய்தார் அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன். மேலும் திடீர் நகர் போன்ற பகுதிகளில் பட்டியல் சமூகத்தினர் வாக்குகளும் திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்ததால் அந்த சமூகத்தின் வாக்குகளும் பெருமளவு அமைச்சர் PTR பெற்றார்.
ஆனால் தற்பொழுது விஜய் அரசியல் வருகையால், சிறுபான்மையினர் மக்களின் வாக்குகளையும் , பட்டியல் சமூக வாக்குக்களையும் பிரிக்க வாய்ப்பு உள்ளது என வெளியாகும் கருத்து கணிப்புகள் கடந்த முறை போன்று இம்முறையும் அமைச்சர் PTR சிறுபாண்மை மக்களின் வாக்குகளையும், பட்டியல் சமூக வாக்குளையும் பெருமளவு பெற முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இந்த தொகுதியில் கணிசமாக வடமாநிலத்தை சேர்ந்த சேட் இருந்தாலும் கூட, இவர்கள் பெரும்பாலும் வாக்கு செலுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை, இது அமைச்சர் PTR க்கு சாதகமான ஒரு சுழலாகவே கருதப்படுகிறது.காரணம் அப்படி இவர்கள் வாக்களிக்க முன்வந்தால் கூட அது பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு உண்டு.
அந்த வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பாடுகள் மதுரை மத்திய தொகுதி மக்களுக்கு அதிருப்தியை கொடுத்து வந்தாலும் கூட, திமுக அமைச்சர் PTR க்கு இணையான வேட்ப்பாளரை எதிர்க்கட்சிகள் களம் இறங்கினால் மட்டுமே அமைச்சர் PTR க்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்கிறது மதுரை மத்திய தொகுதி கள நிலவரம்.

