திமுக ஆட்சியை பிடிப்பது சிரமம்… ஷாக் கொடுத்த உளவுத்துறை ரிப்போர்ட்… நம்பிக்கை இழந்த முக ஸ்டாலின்…

0
Follow on Google News

கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வரை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்து வந்த திமுக, தற்பொழுது வெற்றி பெற்றால் போதும் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக கடந்த சில நாட்களாகவே முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு பக்கம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பக்கம் என்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கையிலேயே பிரச்சாரத்தை தீவிர படுத்ததின் பின்னணியில் அவர்களுக்கு இருக்கும் நெருக்கடிதான் என்பது அம்பலம் ஆகி இருக்கிறது.

குறிப்பாக தமிழக அரசியல் கள நிலவரம் குறித்த தனியார் நிறுவனம் எடுத்த ஒரு ஷாக் ரிப்போர்ட் முதல்வர் கவனத்திற்கு சென்றிருக்கிறது அதில் எப்போதுமே திமுக அரசுக்கு ஆதரவாக இருந்து வரும் அரசு ஊழியர்கள் இம்முறை திமுகவுக்கு எதிரான மனநிலையில் திரும்பி இருப்பதாகவும்,

குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமீபத்தில் நடத்திய போராட்டத்தில் திமுக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் போராட்டத்தை தீவிர படுத்திருக்கிறார்கள், அதே நேரத்தில் சென்னையில் செவிலியர்கள் போராட்டத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த நிலையில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அடுத்த ஜனவரி மாதம் போராட்டத்தை தீவிர படுத்த இருக்கும் நிலையில் செவிலியர்களின் போராட்டமும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது திமுக அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் நடந்த எஸ் ஐ ஆர் பணிகளில் சுமார் 97 லட்சம் வாக்குகள் போலி வாக்காளர்களாக கண்டறிந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் இறந்தவர்கள் தவிர்த்து முகவரி மாற்றம் மற்றும் ஒரே நபருக்கு இரண்டு வாக்குகள் என சுமார் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. திமுகவுக்கு தான் கடும் நெருக்கடியை கொடுத்து இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். காரணம் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற சுமார் 23 தொகுதிகளில் வெறும் 5000 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தார்கள்.

இப்படி ஒரு சூழலில் கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவிவரும் வேளையில் ,அதே நேரத்தில் எப்போதும் திமுக அரசுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய அரசு ஊழியர்களும் திமுகவுக்கு எதிராக திரும்பி இருக்கும் இவ்வேளையில் மேலும் எஸ் ஐ ஆர் பணிகள் மூலம் நீக்கப்பட்ட வாக்குகள் திமுகவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்து இருக்கிறது.

குறிப்பாக திமுக கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் தான் அதிக வாக்குகள் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுகவினரின் சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் பிரிக்க இருப்பதும், அதுமட்டுமின்றி திமுக உட்கட்சி பூசல் என கடு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது திமுக.

அதே வேளையில் இனி வரும்காலங்களில் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக தேமுதிக போன்ற வலுவான கட்சிகள் கூட்டணியில் இணையும் போது விஜய் சொன்னது போன்று திமுகவுக்கும் தாவேகாவுக்கு தான் போட்டி, அதாவது இரண்டாம் இடம் பிடிப்பதில் திமுகவுக்கும் தாவேக்காவுக்கும் தான் போட்டி என்கின்ற நிலை உருவாகிவிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.