பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வரும் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிறைவு விழாவுக்கு பின்பு தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ இருக்கிறது. குறிப்பாக திமுக , தவெக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மிக பெரிய அதிர்ச்சியை அளிக்க கூடிய செய்தியாக நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிறைவு விழாவில் அரங்கேற இருக்கிறது.
குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக – பாஜக கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்து கொண்டிருக்கையில், இந்த பேச்சுவார்த்தையை உறுதி செய்து, அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் கைகோர்க்கும் நிகழ்வாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிறைவு இருக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இந்த நிகழ்வில் பல ட்விஸ்ட் நிகழ இருக்கிறது. இது தொடர்பாக சமீபத்தில் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட டெல்லி பயணத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரிடம் ஆலோசனை நடனத்தி இருக்கிறார் நயினார் நாகேந்திரன். தமிழக தேர்தலநிலவரம் குறிப்பாக கூட்டணி குறித்து தகவல், மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அமித்ஷா மோடி இருவருமே நயினார் நாகேந்திரனினிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் ஏற்கனவே தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமித்ஷாவுக்கு சென்ற உளவு துறை ரிபோர்ட் மற்றும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்ன தகவல் இரண்டுமே ஒரே மாதிரியாக இருந்தது, அமித்சாவுக்கு மிக பெரிய மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது, மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக எத்தனை தொகுதிகளை கேட்டு போட்டியிடலாம் என்பது குறித்து பேசி நயினார் டெல்லி பயணத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் நாயனாரின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிறைவு நிகழ்வில் பிரதமர் மோடி வருவதாக டெல்லி சென்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் உறுதி அளித்து இருக்கிறார். மேலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும் நாயனாரின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிறைவு நிகழ்வுக்கு முன்பு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்து, அந்த நிழச்சியின் மேடையில் அணைத்து கூட்டணி கட்சி தலைலைவர்களும் இடம் பெற வேண்டும் என முடிவு செய்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பாஜக தலைவர் நாயினர் நாகேந்திரன் ஆகிய இருவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்யும் வேளைகளில் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்க்க இருக்கும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் ன் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிறைவு நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் கோர்த்து நிற்க்க இருக்கும் நிலையில், இதில் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் அரங்கேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த காட்சிகள், மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தவிர்த்து மிக முக்கியமான கட்சி அதிமுக – பாஜக கூட்டணியில் இடம் பெற இருப்பதாகவும், இது திமுகவுக்கு மிக பெரிய அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

