திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கடந்த சில நாட்களாகவே திமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என குரல் கொடுத்து வந்தது, குறிப்பாக காங்கிரஸ் ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள கிரிஷ் ஜடைகன் நாங்கள் தமிழகத்தில் வலுவாக இருக்கின்றோம் எங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி இருந்தார்.
மேலும் இந்த ஐவர் குழு சமீபத்தில் முதல்வர் மு க ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து இருந்தது. அப்போது ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று பல கோரிக்கைகளை வைத்ததாகவும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு சட்டமன்றம் அதுமட்டுமில்லாமல் தாங்கள் வலுவாக இருக்கக்கூடிய பாராளுமன்ற தொகுதிகளில் கூடுதலாக சட்டமன்றம் தொகுதி என 70 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் காங்கிரஸ் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தேசிய அளவில் பாஜகவுக்கு நேர் எதிராக இருக்கக்கூடியது காங்கிரஸ் என்றும். அந்த வகையில் அதிமுகவில் பாஜகவிற்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் திமுகவில் காங்கிரசுக்கும் கொடுக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் திமுக தரப்பிடம் காங்கிரஸ் வைத்திருக்கிறது.
ஆனால் திமுக தரப்போ பாஜக தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது, ஆனால் காங்கிரஸ் பல மாநிலங்களில் தோல்வியை தழுவி இருக்கிறது. குறிப்பாக எங்களுடைய தயவில் தான் பாராளுமன்றத்தில் பத்து எம் பி களுக்கு காங்கிரசுக்கு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரசை எப்படி நாங்கள் பாஜகவுடன் சமமாக பார்ப்பது என்று திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சியை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் திமுகவுக்கு தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக அமலாக்கத்துறை வருமான வரித்துறை மூலம் கடும் நெருக்கடி கொடுக்கும் அப்போது தேசிய அளவில் திமுகவுக்கு குரல் கொடுக்க காங்கிரஸ் போன்ற கட்சிகள் தான் கட்சிகளின் உதவி திமுகவுக்கு தேவை என்பதால் திமுக நாம் கேட்கும் தொகுதிகளை கொடுத்து தம்மை அரவணைத்துக் கொள்ளும் என்கின்ற நோக்கில் காங்கிரஸ் காய் நகற்றி இருக்கிறது.
ஆனால் திமுக கடந்த முறை காங்கிரஸ் கொடுத்த 25 தொகுதிகளில் வெறும் 18 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது மேலும் அதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதி ஒதுக்கியதாலேயே திமுக ஆட்சியை இழக்கும் நேரிட்டது. இப்படி ஒரு சூழலில் மீண்டும் காங்கிரசுக்கு அதிக தொகுதியை கொடுத்து ஆட்சியை இழக்க விரும்பாத திமுக, தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடந்த முறை கொடுத்த தொகுதியை மீண்டும் கொடுக்கலாம், தேவைப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் கூடுதலாக கொடுக்கலாம் ,அதுவும் உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்த திமுக.
மொத்தத்தில் ரெம்ப காரர் காட்ட வேண்டாம் கிளம்புங்க கிளம்புங்க காற்று வரட்டும் என்று திமுக தரப்பு காங்கிரசை உதாசீனப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் நெருக்கமாக இருந்து வரும் நிலையில், திமுகவுடன் சண்டை போட்டு வெளியேறாமல் கை கொடுத்து நாசுக்காக வெளியேறி தமிழக வெற்றி கழகத்திலும் கூட்டணி வைத்துவிடலாம் என்கின்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம் காங்கிரஸ் தலைமை .அந்த வகையில் காங்கிரஸ் திமுகவை விட்டு வெளியேறி தமிழக வெற்றி கழகத்திற்குள் இருந்தால் திமுகவுக்கு ஆதரவான சிறுபான்மையினர் வாக்குகள் பெருமளவு தாவேகாவுக்கு சென்று விடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்

