மேலூர் தொகுதியில் TTV தினகரன் போட்டி… விஜய் உடன் நடந்த பேச்சுவார்த்தை… த வெ க கூட்டணிக்கு தாவும் TTV ….

0
Follow on Google News

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்ற TTV தினகரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார். இருந்தாலும் தொடர்ந்து பாஜக தரப்பில் TTV தினகரன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. மீண்டும் பாஜக கூட்டணிக்கு TTV தினகரன் வருவார் என்றெல்லாம் ஆருடம் வெளியானது. அதே போன்று இடையில் திமுக கூட்டணிக்கு TTV தினகரன் செல்கிறார் என்று கூட செய்திகள் வெளியானது.

ஆனால், திமுக, பாஜக, தவேக என மூன்று கட்சிகளுடன் TTV தினகரன் கூட்டணி குறித்து பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் , விசிக போன்ற கட்சிகள் வெளியாகி விஜய் பக்கம் சென்றால், TTV தினகரன் , ஓபிஎஸ், பாமக , தேமுதிக போன்ற காட்சிகளை திமுக கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என்கிற திட்டத்தில் தான் திமுக தரப்பில் இருந்து TTV தினகரன் , ஓபிஎஸ், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாமக, தேமுதிக ஆகிய இரன்டு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளது, மேலும் ஓபிஎஸ் ஸை பொறுத்தவரை பாஜக என்ன முடிவு செய்கிறதோ, அதாவது பாஜக என்ன சொல்கிறதோ அதை கேட்டு செயல்பட கூடியவர், அந்த வகையில் ஓபிஎஸ் முடிவு என்பது அவர் கையில் இல்லை, அது பாஜக கையில் இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

இந்த நிலையில் பாஜக உடன் நெருக்கமாக TTV தினகரன் இருந்து வந்தாலும் கூட, அதிமுக உடன் கூட்டணி வைப்பதற்கு TTV தினகரனுக்கு விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது, அதே நேரத்தில் ஜெயலலிதா வாழ் நாள் முழுவதும் எதிர்த்த திமுக உடன், அம்மா பெயரில் கட்சி வைத்து கொண்டு கூட்டணி வைத்து கொண்டால் அது TTV தினகரன் அரசியல் வாழ்வையே முடிவுக்கு வந்து விடும் என்கிற அச்சம் TTV தினகரன் க்கு உண்டு.

அந்தவகையில் திமுக உடன் கூட்டணி வைக்கும் முடிவை TTV தினகரன் கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக வேண்டாம் திமுக வேண்டாம் என்றால் தற்பொழுது TTV தினகரன் க்கு இருக்கும் ஒரே சாய்ஸ் தமிழக வெற்றி கழகம் தான். அந்த வகையில் தொடர்ந்து செங்கோட்டையன் மூலமாக விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த TTV தினகரன் தவேக உடன் கூட்டணி அமைக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனேவே தவேக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், தவேக உடன் காங்கிரஸ் செல்ல இருப்பது TTV தினகரன் க்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து செங்கோட்டையனிடன் பொங்கல் பண்டிகை முடிந்தது இறுதி முடிவு எடுப்போம் என உறுதி கொடுத்து இருக்கிறாராம் TTV தினகரன் .

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்திடம் கூட்டணிக்கு செல்ல இருக்கும் TTV தினகரன் தனக்கு அதிகமான தொகுதி வேண்டாம், 8 முதல் 10 தொகுதிக்குள் போதும் என்றும், தான் மேலூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக செங்கோட்டையனிடம் விருப்பம் தெரிவித்து இருக்கிறார் செங்கோட்டையன். இதனை தொடர்ந்து TTV தினகரன் நிச்சயம் நம்ம உடன் கூட்டணி அமைப்பார் என விஜய்க்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறார் செங்கோட்டையன்.

இந்நிலையில் தொடர்ந்து பாஜகவும் TTV தினகரன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் TTV தினகரன் மனமாற்றம் அடைந்து மீண்டும் பாஜக உடன் கூட்டணிக்கு செல்வாரா தவேக உடன் கூட்டணி அமைப்பாரா என்கிற பரபரப்பு தமிழக அரசியல் களத்தில் நிலவி வரும் நிலையில், பொங்கல் கழித்து தன்னுடைய கூட்டணி முடிவை TTV தினகரன் இறுதி செய்ய இருக்கிறார் என்கிறது TTV தினகரன் க்கு நெருக்கமான வட்டாரங்கள்.