அமெரிக்காவுக்கு தப்பி ஓட்டம்… 400 கோடி பள்ளி கல்வி ஊழல்… அன்பில் மகேஷ் மனைவி எங்கே.?

0
Follow on Google News

கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறையில் நடந்த மெகா ஊழலில் சிக்கி சிறையில் இருக்கிறார் பி டி அரசகுமார், பி டி அரசகுமாரிடம் நடத்திய விசாரணையில் கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வசூல் செய்த பணத்தை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய மனைவியிடம் தான் கொடுத்தேன் என பி டி அரசகுமார் வாக்குமூலம் கொடுத்துவிட்டார் என கூறப்படுகிறது.

மேலும் கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடைபெற்று இருக்கிறது என அதிகாரபூர்வமாக செய்திகள் வெளியானாலும் கூட, இதில் சுமார் 400 கோடிக்கு குறையாமல் முறைகேடு நடைபெற்று இருக்கிறது என இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரிடம் தான் பணத்தை வசூல் செய்து கொடுத்தேன் என சிறையில் இருக்கும் பி டி அரசகுமார் போட்டு கொடுத்த நிலையில், இந்த விவகாரத்தில் இருந்த தன்னையும், தன்னுடைய மனைவியையும் காப்பாற்றி கொள்ள, பல வகையில் முதல்வர் விஜய்யின் உதவியை நாடினார் அன்பில் மகேஷ், அந்த வகையில் முதல்வர் விஜய்யின் நெருக்கமான வட்டாரங்களில் இருக்கும் முக்கிய புள்ளிகள் மூலமாக அன்பில் மகேஷ் முதல்வர் விஜயின் உதவிய நாட.

முதல்வர் தரப்பில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கறாராக சொல்லி விட்டது, இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில், இந்த விவகாரத்தில் இருந்து மனைவியை மட்டுமாவது காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய அன்பில் மகேஷ், தன்னை மட்டும் இந்த வழக்கில் சேர்த்து கொள்ளுங்க, என் மனைவியை உள்ளே இழுக்க வேண்டாம், என முதல்வர் விஜய்யின் உதவியை நாடி இருக்கிறார் அன்பில் மகேஷ்.

ஆனால் அதற்கும் முடியாது என மறுத்து விட்டது முதல்வர் தரப்பு. இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் தொடர்பான இடங்களில் நடைபெற்ற மத்திய குற்ற பிரிவு போலீசார் நடத்திய சோதனையை தொடர்ந்து அன்பில் மகேஷ் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது, இதனை தொடர்ந்து அடுத்து எந்த நேரமும் அன்பில் மகேஷ் மனைவியை விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள படஇருக்கிறார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மனைவியை காப்பாற்ற ஒரே வழி வெளிநாடுகளுக்கு அனுப்பி சிறிது காலம் அங்கே தங்கவைப்பது தான் சரியான முடிவாக இருக்கும் என முடிவு செய்த அன்பில் மகேஷ், அமெரிக்காவில் இருக்கும் அன்பில் மகேஷ் மனைவியின் சகோதரர் வீட்டில் சில காலம் இருக்கட்டும், அப்போது தான் இந்த வழக்கில் இருந்து மனைவியை காப்பாற்ற முடியும் என முடிவெடுத்த அன்பில் மகேஷ்

மனைவியை அமெரிக்காவுக்கு அனுப்பும் வேளையில் இறங்கி இருக்கிறார், அமெரிக்காவில் கால் வைத்து விட்டோம் என்றால் தப்பித்தோம் என அன்பில் மகேஷ் மனைவியும் அமெரிக்க செல்ல ஆயத்தமான வேளையில், சில விதிமுறை காரணமாக அமெரிக்கவில் நுழைய முடியாமல் திட்டம் தோல்வியை தழுவி தமிழகத்திலே முடங்கி இருக்கிறாராம் அன்பில் மகேஷ்.

இந்நிலையில் அன்பில் மகேஷ் மனைவி வெளிநாடு தப்பி செல்லும் திட்டம் அறிந்த மாநில அரசு விரைவில் அன்பில் மகேஷ் மனைவியை விசாரணைக்கு அழைத்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும், அப்போது தான் அவர் வெளிநாடு செல்வதை தடுக்க முடியும் என மிக தீவிரமாக இறங்கி இருப்பதால் விரைவில் அன்பில் மகேஷ் மனைவி விசாரணைக்கு அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here