நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு தமிழக பாஜக பொறுப்பாளராக ராம் மாதவ் நியமிக்கப்பட்டார், அவரை தொடர்ந்து இணை பொறுப்பாளராக நிர்மல் குமார் சுபரா மற்றும் டி கே அருணா ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனர், இதனை தொடர்ந்து பொறுப்பாளராக ராம் மாதவ் நியமிக்கப்பட்ட பின்பு, தமிழக பாஜகவின் உள் விவகாரம் முதல் கொண்டு தோண்டி எடுத்து அறிக்கை தயார் செய்ய தொடங்கி இருக்கிறார்.
குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் ராம் மாதவை தமிழக பொறுப்பாளராக நியமித்த போதே தமிழக பாஜகவில் என்ன தான் நடக்கிறது என்கிற ஒரு ரிப்போர்ட்டை எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்கள், இதனை தொடர்ந்து ராம் மாதவ் மற்றும் , நிர்மல் குமார் சூபரா , டி கே அருணா ஆகியோர் அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்த போது, தமிழக பாஜக செயல்பாடுகள் என்ன.?

அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவராக மாற்றம் செய்யப்பட்ட பின்பு நடக்கும் செயல்பாடுகள் என்ன .? என்பதை குறித்து முழு அறிக்கையை தயார் செய்யும் பனி இறங்கிய பொறுப்பாளர் மற்றும் , இணை பொறுப்பாளர்கள் பல விவகாரங்களை சேகரித்து இருக்கிறார்கள், குறிப்பாக இணை பொறுப்பாளராக டி கே அருணா என்கிற பெண்ணை நியமித்ததின் பின்னணியில், கட்சியின் பெண் நிர்வாகிகளிடமும் பல விசயங்களை கேட்க எதுவாக இருக்கும் என்பதாலே ஒரு பெண் நிர்வாகியை இணை பொறுப்பாளராக நியமித்து இருக்கிறது டெல்லி பாஜக என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அறிக்கை தயார் செய்யும் பனி, சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்து டெல்லி திரும்பிய பின்பு சமர்ப்பிக்க பட்டு இருக்கிறது, அதில் தமிழக பாஜகவில் பல வகையில் பணம் விளையாடி இருக்கிறது, கட்சி நிதியை ஆட்டைய போடவே ஒரு கும்பல் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது, மேலும் மத்தியில் பாஜக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவங்களின் வசூல் செய்யவே பலரும் தேர்தலில் சீட் வாங்கி போட்டியிடுவதாக அறிக்கையில் இடம் பெற்று இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகம் வரும் போது, அவர்களை வரவேற்க்க தயார் செய்யப்படும் லிஸ்ட்டில் பலரிடம் பணம் பெற்று அந்த வாய்ப்பை கொடுத்து இருப்பது தெரிய வந்திருக்கிறது, குறிப்பாக பிரதமர் மோடி உடன் ஒரு புகைடபத்தை எடுத்துக்கொண்டு, அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு பலரும் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
மேலும் சென்னை துறைமுகத்தில் மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி , பாஜகவை சேர்ந்த ஒரு தரப்பினர் கல்லா காட்டியதும் அந்த அறிக்கையில் இடம் பெற்று இருக்கிறது, அந்த வகையில் தமிழக பாஜக தலைமையை கூண்டோடு மாற்றம் செய்யவேண்டும், மேலும் தற்பொழுது தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தலையீடு எதிர்காலத்தில் துளியளவும் இருக்க கூடாது என்பதும் அந்த அறிகையில் இடம் பெற்று இருந்து இருக்கிறது.
இதனை தொடர்ந்து ராம் மாதவ் தயார் செய்த அறிக்கை பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்ட பின்பே, மத்திய இணை அமைச்சராக இருந்த எல் முருகன் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு டெல்லியில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கிறார், அடுத்து விரைவில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட தமிழக பாஜக தலைமை கூண்டோடு கலைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இருந்து இனி யாருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாம் டெல்லி பாஜக தலைமை, அந்த வகையில் யாரும் மத்தியில் அமைச்சரவையில் இடம் பெறுவதர்க்காக முயற்சி செய்தால், அதை கைவிட்டு விடுங்க என டெல்லி பாஜக தலைமையிடம் இருந்து உத்தரவும் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

