திமுக ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கோரி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சங்கத் தலைவராக இருந்த பி டி அரசகுமாரிடம் நடத்திய விசாரணையில், முறைகேடாக வசூல் செய்த பணத்தை அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய மனைவியிடம் தான் கொடுத்தேன் என வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ்க்கு சொந்தமான இடங்களில் தமிழக குற்ற பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டு, அது தொடர்பாக அன்பில் மகேஷிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணையை நடத்தியது போலீசார், இருந்தாலும் அன்பில் மகேஷிடம் நடத்திய விசாரணை போதுமானதாக இல்லை என கருதுகிறது போலீசார்.

மேலும் அன்பில் மகேஷ் மீது வழக்கும் பதிவு செய்யப்ட்டுள்ளதால் எந்த நேரமும் அன்பில் மகேஷ் கைது செய்யப்படலாம் என்கிற பரபரப்பு நீடித்து வந்த நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த முன் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக காவல் துறை சார்பில் இந்த விவகாரத்தில் “400 கோடி ரூபாய் பணம் கைமாறி உள்ளது என தெரிவித்த போலீசார் தரப்பு,
மேலும் இந்த பணம் தனியார் பள்ளிகளிடமிருந்து நேரடியாக கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் முன் ஜாமீன் கேட்டுள்ளார் அன்பில் மகேஷ் என்றும், மேலும் இந்த வழக்கில் குன்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் முத்துக்குமாரை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தான் பாதுகாத்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்த போலீசார் தரப்பு.
மேலும் தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் உதவியாளர் சுரேசிடம் நடத்திய விசாரணையில், சுரேஷ் மூலமாக பணம் பெறப்பட்டு இருக்கிறது, அதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளது என்றும், அந்த வகையில் தற்பொழுது அன்பில் மகேஷ்க்கு ஜாமின் வழங்கப்பட்டால், தற்போழுது நடந்து வரும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை பாதிக்கும் ஏன் வாதிட்ட போலீசார் தரப்பு.
மேலும் அன்பில் மகேஷ்க்கு ஜாமின் வழங்கப்பட்டால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அன்பில் மகேஷின் 8 மணிநேரம் விசாரணை நடத்தினாலும் கூட, அந்த விசாரணை போதுமானதாக இல்லை என நீதிமன்றத்தில் வாதிட்ட போலீசார் தரப்பு அன்பில் மாகேசுக்கு ஜாமின் வழங்க கூடாது என வாதிட்டது. இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் தரப்பில், இனிமேல் விசாரணை நடத்த எதுவும் இல்லை. விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு அளிக்க தயார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இரண்டு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அன்பில் மகேஷ் வழக்கின் கேஸ் டைரியை படித்துப் பார்த்துவிட்டு, வருகிற அக்டோபர் 26ஆம் தேதி அன்று இந்த மனு மீது முடிவை அறிவிக்கிறேன் என்று கூறி உத்தரவை ஒத்தி வைத்து இருக்கிறார், இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேசுக்கு ஜாமீன் கிடைக்குமா .? கிடைக்காத என்கிற பரபரப்பு ஒரு பக்கம் நீடித்து வருகையில்,
வரும் 26ம் தேதி இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், அன்பில் மகேசுக்கு ஜாமின் கொடுப்பதை நீதிமன்றம் தவிர்த்துவிட்டால் , அடுத்து அன்பில் மகேஷ் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது, அந்த வகையில் திமுக முன்னாள் அமைச்சர்களில், தற்போதைய தவெக ஆட்சியில் முதல் கைதாக அன்பில் மகேஷ் கைது இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

