விஜய் உங்களுக்கு ஓகே தான… ஒவ்வொன்றையும் கேட்டு செய்த பிரதமர்… 25 நிமிடம் தனியாக சந்தித்து என்ன பேசினார்கள்…

0
Follow on Google News

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி உடன் முதல்வர் விஜய் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டார், பிரதமர் மற்றும் முதல்வரும் மிக நெருக்கமா இருக்கும் காட்சிகள், மத்திய மாநில அரசின் ஒற்றுமையை பிரதிபலித்தது, குறிப்பாக பிரதமர் தமிழகத்தில் வந்து இறங்கியது தொடங்கி, மீண்டும் அவர் திரும்பும் வரை கூடவே இருந்த முதல்வர் விஜய்,

பிரதமர் மோடி விமானம் நிலையம் வருவதற்கு முன்பு கடைசியாக பங்கேற்ற ஒரு தனியார் நிகழ்வில் மட்டும் கலந்து கொள்ளவில்லை முதல்வர் விஜய், அந்த நிகழ்வில் கலந்து கொள்வதை தவிர்த்து விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய், சுமார் 1 மணி நேரம் காத்திருந்து பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தார். ஆனால் விஜய் பிரதமர் மோடியை வழியனுப்பி வைப்பதற்கு முன்பு சுமார் 25 நிமிடங்கள் தனியாக பிரதமர் மற்றும் முதல்வர் இருவரும் மட்டுமே பேசினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையின் போதும் உடன் தமிழக ஆளுநர் அர்லேகர் இருந்தார், தமிழக முதல்வர் ,தமிழக ஆளுநர், பிரதமர் ஆகிய மூவரும் மட்டும் தனியாக நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது , தமிழக நலன் குறித்து பல கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முன் வைத்து இருக்கிறார் முதல்வர் விஜய், அப்போது அண்டை மாநிலத்தின் பிரச்ச்னையான, காவேரி போன்ற நதி நீர் பிரச்சனையை மாநில அரசு தான் முன் வந்து சரி செய்யவேண்டும்.

கடந்த காலங்களில் நடந்தது போன்று, இந்த நதி நீர் பிரச்சனையை இரண்டு மாநில பிரச்சனையாக அறிக்கை மூலம் சண்டையிட்டு கொள்வதை என்னுடைய தலைமயிலான அரசு செய்யாது, ஆனால் இந்த நதி நீர் பிரச்சனையை, மத்திய அரசு பாரபட்சமின்றி செய்லபட வேண்டும் என்று பிரதமரிடம் பேசி இருக்கிறார் முதல்வர் விஜய், மேலும் கோதாவரி – காவேரி நதிநீர் இணைப்பு குறித்தும் பேசி இருக்கிறார் முதல்வர் விஜய்.

அதுமட்டுமின்றி தமிழகத்தின் தேவையா கல்வி நிதி தொடங்கி மற்ற நிதிகளையும் பிரதமர் மோடியிடம் கேட்டிருக்கிறார் முதல்வர் விஜய், இந்த பேச்சுவார்த்தையின் போது, முதல்வர் விஜய்யின் பேச்சுக்களை கேட்ட பிரதமர் மோடி மற்றும் தமிழக ஆளுநர் அர்லேகர்ஆகிய இருவருக்கும் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது, இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசுடன் கடந்த திமுக ஆட்சி போன்று வீண் சண்டையிட்டு தமிழக வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் இருந்தது போன்று இல்லாமல்.

மத்திய அரசுடன் ஒரு இணக்கமான போக்கை தமிழக முதல்வர் விஜய் விரும்புவதை பிரதமர் மற்றும் ஆளுநர் ஆகிய இருவருமே உணர்ந்து இருக்கிறார்கள், குறிப்பாக தமிழ்நாடு தொடர்பான மத்திய அரசின் சமீப கால நடவடிக்கைகள் பெரும்பாலும் முதல்வர் விஜய்யிடம் கேட்டே செயல்ப்பட்டு வருவதாகவும், அப்படி தான் தமிழக ஆளுநராக அர்லேகர் நியமனம் கூட விஜய்யிடம் கேட்ட பின்பே, பிரதமர் மோடி நியமித்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் பிரதமர் மோடியை வழியனுப்ப முதல்வர் விஜய் ஒருமணி நேரம் காத்திருந்தார், என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில் , அதன் பின்னணி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது, அதாவது பிரதமர் விமானம் நிலையம் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே வந்த முதல்வர் விஜய், உணவு சாப்பிடவே முன் கூட்டியே விமானம் நிலையம் வந்துள்ளார்.

முதல்வர் வீட்டில் இருந்து உணவு விமானம் நிலையம் வந்திருக்கிறது, இதனை தொடர்ந்து முதல்வர் விஜய்யும் விமானம் நிலையம் வந்து உணவு சாப்பிட்டு விட்டு, பின்பு பிரதமர் வருகைக்காக காத்திருந்து இருக்கிறார், இதனை தொடர்ந்து பிரதமர் வந்ததும் சுமார் 25 நிமிடம் பிரதமர் உடன் பேசியவர், அதனை தொடர்ந்து பிரதமர் வழியனுப்பி வைத்து இருக்கிறார், பிரதமர் மலர்ந்து முகத்துடன் டெல்லி திரும்பி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here