நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான உடனே தவெக வில் முதல் நபராக துண்டை போட்டு இடம் பிடித்த கட்சி காங்கிரஸ் கட்சி, விஜய் என்கிற குதிரை மீது ஏறி தமிழகத்தில் காலாவதியான காங்கிரஸ் கட்சியை வளர்த்து விடலாம், வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் விஜய் உடன் கை கோர்த்து தென் மாநிலங்களில் மிக பெரிய வெற்றியை பெற்று விடலாம் என்கிற கனவில் முதல்வராக விஜய் பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தியின் எதிர்பார்ப்பு எதுவும் விஜய்யிடம் நடக்காது என்பதை உணர்த்தி இருக்கிறது சமீபகாலமாக தவெக காங்கிரஸ் கட்சியை டீல் செய்யும் விதம்.
இதனை தொடர்ந்து மீண்டும் திமுக பக்கம் செல்ல ஒரு பக்கம் காங்கிரஸ் தரப்பில் முயற்சியை மேற்கொண்டு வந்தாலும் கூட, காங்கிரஸ் கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்க்க கூடாது என திமுகவில் எதிர்ப்பு குரல் வெடித்து வருகிறது, இருந்தாலும் காங்கிரசில் இருக்கும் திமுக ஆதரவு தலைவர்கள் மூலம் அதற்கான வேலையை காங்கிரஸ் தலைமை முயன்று வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ள கருத்து, தவெக – காங்கிரஸ் கூட்டணி இனியும் நீடிக்க வாய்ப்பில்லை, திமுக பக்கம் காங்கிரஸ் சாய தொடங்கி விட்டது என்கிற சமிக்கையாகவே பார்க்க படுகிறது. நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கைது செய்யப்பட்டது அவசியம் கண்டிக்க வேண்டும் என தெரிவித்த காங்கிரசை எம்பி ஜோதிமணி .
மேலும் பொதுவாழ்வில் இருக்கின்ற ஒரு பெண்ணை முறையான காரணத்தைக் கூட தெரிவிக்காமல் இரவு உடையில் கைது செய்து அழைத்துவர வேண்டிய அவசியம் என்ன? இதே அளவுகோல்தான் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுகிறதா? என மறைமுகமாக தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில் அமைந்து இருக்கிறது ஜோதிமணியின் இந்த கருத்து.
மேலும் சென்னை மேயர் பிரியா சமீபத்தில் தவெக வினர் தன்னை இழிவாக சித்தரித்து பதிவு செய்கிறார்கள் என குற்றசாட்டுகளை தேறிவது வந்த நிலையில், தற்பொழுது மேயர் பிரியாவுக்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கிறார் ஜோதிமணி, ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு இளம்பெண் மேயர் பிரியா என குறிப்பிட்ட ஜோதிமணி,
மேலும் மேயர் பிரியா அந்தப் பொறுப்பிற்கும், தீவிர அரசியலுக்கும் புதியவர். அதையெல்லாம் தாண்டி அவர் சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் இருந்தால் நாகரிகமாக பொதுவெளியில் வையுங்கள். அவர் பதில் சொல்வார். அதை செய்யாமல் அவ்வளவு பச்சையாக பொதுவெளியில் ஒரு பெண்ணைப் பேசியவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பிய ஜோதிமணி.
மேலும் முதலமைச்சரைப் பற்றி ஒரு பெண் மேடையில் மோசமாகப் பேசுகிறார். கனிமொழி மேடையிலேயே அதைக் கண்டித்ததை ஜோதிமணி சுட்டி காட்டியுள்ளது, ஒரு பக்கம் திமுகவுக்கு ஆதரவாக கனிமொழி செயல்பாடுகளை உயர்த்தி பிடித்து, மறுப்பக்கம் தவெக அரசுக்கு எதிராக மறைமுகமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜோதிமணி.
அந்த வகையில் ஜோதிமணியை வைத்து தவெகவுக்கு எதிராக காங்கிரஸ் தன்னுடைய அரசியல் நகர்வுகளை நகட்ட தொடங்கி இருக்கும் அதே வேளையில், திமுகவை குளிர்வித்து அவர்கள் மனதில் மீண்டும் இடம் பிடிக்கும் வேலை தான் ஜோதிமணியின் இந்த கருத்து என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்நிலையில் காலாவதியான காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவி கொடுத்த தவெகவுக்கு இது தேவை தான் என பலரும் கருத்து தெரிவித்து வருவதையும் பாக்க முடிகிறது.

