வாஜ்பாய் போட்ட விதை… விருச்சமாக இந்தியா நிமிர்த்து நிற்கிறது… ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ..

0
Follow on Google News

இந்தியாவின் வளர்ச்சி என்பது வாஜ்பாய் பிரதமராவதற்கு முன் வாஜ்பாய் பிரதமராவதற்கு பின் என்று தான் பிரித்து பார்க்க வேண்டும், அந்த வகையில் நல்லாட்சி நாயகன் என போற்ற கூடிய மறைந்தும், இந்திய மக்கள் மனதில் வாழ்ந்து வரும் வாஜ்பாய் பிரதமரான பின்பே தரமான சாலைகள் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாஜ்பாய் கொண்டு வந்த தங்க நார் சாலைக்கு பின்பே வல்லரசு நாடுகளுடன் இந்தியா போட்டி போடும் அளவுக்கு வளர்ந்தது.

வாஜ்பாய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை , இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 50 ஆண்டுகள் கடந்தும் கூட தரமான சாலை இல்லாமல் உலக நாடுகள் இந்தியாவை கேலி கிண்டல் செய்யும் வகையில் தான் இந்தியாவை சுமார் 50 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் வைத்திருந்தது.

ஆனால் 1998 முதல் 2004 வரையிலான வாஜ்பாய் ஆட்சி காலத்தில், கொண்டுவரப்பட்ட டெல்லி – மும்பை – சென்னை – கொல்கத்தா ஆகிய பெரும் நகரங்களை இணைக்கும் 5,846 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை என்பது வெறும் போக்குவரதுமட்டுமில்லை, அது இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்கிற தொலைநோக்கு பார்வையில் வாஜ்பாய் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் இது.

அதே போன்று வடக்கு – தெற்கு, கிழக்கு – மேற்கு காரிடார்கள் என ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரையும், போர்பந்தர் முதல் சில்சார் வரை , சுமார் 7,142 கி.மீ. சாலை கொண்டு வந்ததும் வாஜ்பாய் அரசு தான். முன்பெல்லாம் லட்சத்தில் ஒருவர் தான் தொலைபேசி பயன்படுத்துவதும் சூழலில், தொலைபேசியை பார்ப்பதே அபூர்பமாக இருந்த நிலையில், 1999ல் வாஜ்பாய் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு புதிய தொலைத்தொடர்பு கொள்கை

நிலையான லைசன்ஸ் கட்டணத்தை நீக்கி, வருவாய் பகிர்வு முறை அறிமுகம் செய்து, ஒரு நிமிட அழைப்புக் கட்டணம் ₹16 இருந்து குறைத்ததின் விளைவாக இந்தியாவில் மொபைல் பயன்பாடு வெகுவாக அதிகரித்தது, மேலும் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி இங்கே இருந்துதான் தொடங்கியது. BSNL, TDSAT போன்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு தொலைதொடர்பில் வளர்ச்சிக்கு வித்திட்டதும் வாஜ்பாய் அரசு தான்.

மேலும் வாஜ்பாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட FRBM சட்டம் – 2003 : நிதி பற்றாக்குறையை குறைத்து இந்தியாபொறுப்புள்ள பொருளாதார நாடு

என்பதை உலகுக்கு உணர்த்தியது. அதுமட்டுமின்றி நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிர்வணக்களை தொழில்முறையில் தனியார்மயமாக்கும் அமைச்சகம் கொண்டுவரப்பட்டது.மேலும் அரசின் பணி என்பது ஆட்சி தான், அரசின் பணி வர்த்தகம் இல்லை என்பதை உணர்த்தியது வாஜ்பாயின் கொள்கை.

1998ம் வாஜ்பாய் ஆட்சியில் உலக நாடுகள் அழுத்தத்தையும் மீறி நடந்த பொக்ரான் – 2 அணு சோதனை இந்தியாவை அணு சக்தி நாடாக உருவெடுக்க வைத்தது. 2003ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் தான் சந்திரயான் – 1 தொடங்கப்பட்டது, 2002 டிசம்பர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான் இந்தியாவில் முதல் மெட்ரோ டெல்லியில் தொடங்கப்பட்டது.

இப்படி இன்று நாம் பயணிக்கும் நெடுஞ்சாலைகள்… நாம் பேசும் மொபைல் போன்கள்… நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் சேவைகள்… அனைத்திற்கும் விதை போட்டவர் வாஜ்பேயே என்பதை நினைவு கூர்வோம்.