இன்னும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தவெக நிலைப்பாடு என்ன என்கிற குழப்பம் தான் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2006 மற்றும் 2011 ஆகிய இரண்டு சட்டசபை தேர்தலிலும் விஜயகாந்த் எடுத்த நிலைப்பாடு தான் தேர்தல் முடிவுகளை மாற்றியது. அதாவது 2006 விஜயகாந்த் கட்சி தொடக்கிய ஒரு வருடத்தில் அதிமுக – திமுக இரண்டு கட்சிகளிடமும் கூட்டணி இல்லை என தனித்து போட்டியிட்டார்.
அப்போது திமுக மைனாரிட்டி ஆட்சியை அமைத்தது. திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜயகாந்த் பிரித்ததின் விளைவு 2006ல் அதிமுக தோல்வியை தழுவியது. அதே போன்று விஜயகாந்த் 2011ல் அதிமுக உடன் கூட்டணி அமைத்தார், திமுக எதிர்கட்சி அந்தஸ்தை கூட தக்க விக்க முடியாமல் படு தோல்வியை சந்தித்தது. அப்படி ஒரு இடத்தில் தான் தற்பொழுது விஜய் உள்ளார்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் விஜய் யாருடன் கூட்டணி இல்லை என தனித்து போட்டியிட்டால், அதிமுக , திமுக யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது, தொங்கு சட்டசபை தான் அமையும், ஆனால் அதிமுக – பாஜக உடன் விஜய் கூட்டணி அமைத்தால், எப்படி 2011ல் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் படுதோல்வியை சந்தித்ததோ, அதே போன்ற நிலை திமுகவுக்கு ஏற்படும் என்கிறது கருத்து கணிப்புகள்.
இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு பின்பு பாஜகவை விமர்சனம் செய்வதை குறைந்து கொண்ட விஜய், திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருவதின் பின்னணியில் பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் விஜய் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கரூர் சம்பவத்திற்கு பின்பு சுமார் 3 முறை விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டணி குறித்து பேசி இருக்கிறார்.
ஆனால் விஜய் தன்னை முதல்வர் வேட்ப்பாளராக முன்னிறுத்தி தன்னுடைய தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவே விருப்பம் தெரிவித்து வந்து இருக்கிறார். மேலும் காங்கிரஸ் தரப்பில் இருந்தும் விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் கூட, ராகுல் காந்தி திமுக உடன் கூட்டணியை தொடர விரும்புகிறார், பிரியங்கா காந்தி விஜய் உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிறார் இப்படி காங்கிரஸ் உள்ளே மிக பெரிய குழப்பம் நீடித்து வருகிறது.
மேலும் செங்கோட்டையன் மூலம் TTV தினகரன் உடன் விஜய் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் பிடிகொடுக்கமால் இருந்து வருகிறார் TTV தினகரன், இப்படி ஒரு சூழலில் விஜய் பக்கம் TTV , OPS யாரும் சென்று விடாமல் தடுக்கும் வேளைகளை பாஜக செய்து வருகிறது. அந்த வகையில் விஜய் உடன் யாரும் கூட்டணிக்கு செல்ல விடாமல் தனிமை படுத்தும் வேலையை பாஜக செய்து வருவதின் பின்னணியில் ,விஜய்யை தனிமை படுத்தி விட்டால் , அவர் நம்முடைய கூட்டணிக்கு வந்து விடுவார் என்பது தான் பாஜக திட்டமும் கூட.
இப்படி ஒரு சூழலில் சமீபத்தில் விஜய் தரப்பில் பாஜக நடத்திய பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என விஜய் தரப்பு தெரிவித்து இருக்கிறது. அதாவது காங்கிரஸ் கூட்டணிக்கு வரவில்லை என்றால் பாஜக – அதிமுக கூட்டணிக்கு விஜய் தயார் என மறைமுகமாக விஜய் தரப்பில் பாஜகவுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.
இது பாஜக தலைமைக்கு மிக பெரிய மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறாது என நம்புகிறது பாஜக அந்த வகையில் விஜய் பாஜக கூட்டணிக்கு வருவார் என பாஜக நம்பிக்கையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

