துணை முதல்வர் பதவியை குறி வைத்த கனிமொழி… சட்டசபை தேர்தலில் போட்டி… உதயநிதி அரசியலுக்கு விழுந்த ஆப்பு…

0
Follow on Google News

கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் 2007ல் தன்னுடைய தந்தையின் செல்வாக்கில் ராஜ்யசபா உறுப்பினரானார் கனிமொழி. அப்போது குடும்ப வாரிசுகளுக்கு இடையே அரசியல் போட்டி நிலவைக் கொண்டிருந்த காலம் அது, மு க அழகிரி ஒரு பக்கம், மு க ஸ்டாலின் ஒரு பக்கம், தயாநிதி மாறன் ஒரு பக்கம் என திமுக தலைமையை பிடிக்க போவது அடுத்து யார் என்கின்ற அரசியல் போட்டிக்கு இடையில் ராஜ்யசபா எம்பி ஆனார் கனிமொழி.

2007ல் ராஜசபா எம்பியான கனிமொழி, அப்போது காங்கிரஸ் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியாக இருந்தாலும் கனிமொழியால் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை, தொடர்ந்து இரண்டு முறை ராஜ்யசபா எம்பி ஆக இருந்த கனிமொழி 2019 ஆம் ஆண்டு மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடும் மத்திய அமைச்சராகி விடலாம் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது, கனிமொழிக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை, அதேபோன்று கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடும் நமக்கு மத்திய அமைச்சர் பதவிக்கான வாய்ப்பு கிடைக்கும் என மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் களமிறங்கிய கனிமொழிக்கு ரவெற்றி பெற்றாலும் கூட மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்ததால் அவருக்கு மத்திய அமைச்சராக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இனி அடுத்தடுத்து வரும் தேர்தலிலும் கூட மத்தியில் பாஜக ஆட்சியை அகற்றுவது மிக கடினமான ஒன்று . அதே நேரத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பதற்கான எந்த ஒரு சாத்திய கூறும் இல்லை. இப்படி இருக்கையில் எம் பி ஆக இருந்து காலத்தை ஓட்டி விடாமல் மாநில அரசியல் பக்கம் திரும்புவதற்கு கனிமொழி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் அரசியல் ராஜதந்திரியான கனிமொழி முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பம் அவரை அரசியலில் இருந்து ஓரம் கட்டுவதற்கான வேலைகளை செய்தாலும் கூட சாதுரியமாக காய் நகற்றி நினைத்ததை சாதிக்கக் கூடிய வகையில் அரசியல் சாணக்கியர் என்று சொல்லக்கூடியவர் தான் கனிமொழி.

அந்த வகையில் தான் திமுகவில் உயர் பதவியை பெற்றது மட்டுமல்லாமல் அண்ணா அறிவாலயத்தில் தனக்கான தனி அறையும் பெற்றார் கனிமொழி. இந்த நிலையில் தென் மண்டலத்தில் தேர்தலுக்கான முக்கிய பொறுப்பு கனிமொழிக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 25 தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரமும் கனிமொழிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு சூழலில் வரும் சட்டம் சபை தேர்தலில் தூத்துக்குடியில் சட்டசபை த் தொகுதியில் கனிமொழிப் போட்டியிடுவதற்காக முயற்சியில் இறங்கியுள்ள கனிமொழி துணை முதல்வர் பதவியை குறிவைத்து காய் நகற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கனிமொழி மாநில அரசியலில் தலையிடுவது உதயநிதி ஸ்டாலினுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இதற்கு காரணம் கட்சியில் உள்ள சீனியர்கள் மத்தியில் உதயநிதியை விட கனிமொழிக்கே செல்வாக்கு அதிகம். இப்படி இருக்கையில் ஸ்டாலினுக்கு பிறகு திமுக தலைமைகான கனிமொழி – உதயநிதி இருவரில் யார் என்கின்ற போட்டி வரும்போது கனிமொழியின் அரசியல் ராஜதந்திரத்திற்கு முன்னால் உதயநிதி விழுந்து விடுவார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.