திருமாறன் ஜி மீது அவதூறு.. பெண் பின்னால் இயங்கும் SIR .. யார் அந்த SIR ?

0
Follow on Google News

அரசியலில் ஜொலிக்க வேண்டும் என்றால் மக்கள் மனதை வெல்ல வேண்டும் அல்லது மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்க வேண்டும் அல்லது ஆள் பலம் இருக்க வேண்டும் இப்படி எதாவது தகுதியை வளர்ந்து கொண்டு அரசியலில் ஜொலிக்க வழியில்லாத சிலர் , மக்கள் மத்தியில் அரசியலில் ஜொலித்து கொண்டிருக்கும் ஒருவர் மீது புழுதியை வாரி இறைத்து அவர்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை இழக்க வைத்து விட்டால், அந்த இடத்தில் நாம் அமர்ந்து கொள்ளலாம் என்கிற அரசியல் வாதியும் உண்டு.

அப்படி ஒரு நிகழ்வு தான் தொடர்ந்து துங்கா நகரில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் தென் இந்திய பார்வேர்ட் ப்ளாக் நிறுவன தலைவரின் இமேஜேய் டேமேஜ் செய்யும் முயற்சியாக பல்வேறு போலீஸ் புகாரில் சிக்கிய பெண் ஒருவர் எழுப்பிய கேள்வி குறித்து துங்கா நகர் அரசியல் வட்டாரத்தில் விசாரித்ததில், அந்த பெண் பின்னால் இயங்குவது ஒரு SIR தான், அவரை நாங்கள் துங்கா நகர் SIR என்று அழைப்போம் என்கிறார்கள்.

மேலும் இந்த பெண் வேறு யாரும் இல்லை, இதற்கு முன்பு பல போலி ஐடிகளை உருவாக்கி பாஜக முக்கிய தலைவர்களான கேசவ விநாயகம், எல் முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி, மகா சுசீந்திரன், வழக்கறிஞர் நிரஞ்சன் குமார், மாரி சக்கரவர்த்தி, ராஜா ரவிபாலா ஆகியோர் மீது அவதூறு பரப்பியவர், குறிப்பாக திருமாறன் ஜி மீதும் போலி ஐடி களை உருவாக்கி அவதூறு பரப்பி சிக்கியவர் தான் துங்கா நகர் SIR இயக்கக்கூடிய இந்த பெண் என்கிறார்கள் துங்கா நகர் வலது சாரி சிந்தனையாளர்கள்.

அதாவது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இந்த பெண் பின்னால் ஒளிந்து கொண்டு துங்கா நகரில் செல்வாக்கு மிக்க வலது சாரி தலைவர்களை குறிவைத்து டேமேஜ் செய்வது தான் அந்த சாரின் நோக்கமாக இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். மேலும் இதுகுறித்து தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகளிடம் யாருப்பா உங்கள் தலைவருக்கு எதிராக இந்த பெண் பின்னால் இருந்து செயல்படுவது என நாம் கேட்ட போது.

எங்கள் தலைவர் திருமாறன் ஜி ஒரு கூட்டத்திற்கு சென்றால், குடும்ப பெண்கள் கை எடுத்து கும்பிட்டு வரவேற்பார்கள், அந்த அளவுக்கு சமுதாயத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் போற்ற கூடிய தலைவர், ஆனால் வெளியில் விவேகானந்தரின் சொற்பொழிவுகளை வாய் கிழிய பேசி கொண்டு பிரேமானந்தா மாதிரி வாழும் யாரோ ஒருவர் தான், இப்படி பெண் பின்னால் இருந்து கொண்டு எங்கள் தலைவரின் இமேஜை டேமேஜ் செய்யும் சில்லறை வேலையை செய்வார்கள் என்கிறார்கள் தென் இந்திய பார்வேர்ட் ப்ளாக் கட்சி நிர்வாகிகள்.

குறிப்பாக இந்து அமைப்புகளில் தன்னுடைய பொது வாழ்க்கையை தொடக்கிய திருமாறன் ஜி, பாஜக, ஏடிவிபி என தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் இல கணேசன் ஆசியுடன் தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியை ஆரம்பித்தவர் , திருமாறன் ஜி திருமணத்தை நடத்தி வைத்தவர் இன்றைய துணை ஜனாதிபதி சிபி ராதகிருஷ்னன், தன்னுடைய மகனுக்கு ராதாகிருஷ்னன் என பெயர் சூட்டியவர் திருமாறன் ஜி.

இப்படி பாஜக சித்தாந்தம் மற்றும் பாஜக மூத்த தலைவர்களுடன் ஒன்றி பயணித்து வரும் திருமாறன் ஜி இதுவரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப தூண் விவகாரத்திற்கு மட்டும் 1991ல் இருந்து இதுவரை சுமார் 34 முறை கைது செய்யப்பட்டவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அவருடைய கட்சியில் சார்பில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற மிக பிரமாண்ட கட்சி மாநாடு நடத்தி காட்டிய திருமாறன் ஜி பற்றி, என்ன இவர் களத்தில் புரூப் பண்ணி இருக்கிறார் என ஒரு பெண் பின்னால் ஒழிந்து கொண்டு திருமாறன் ஜி இமேஜை டேமேஜ் செய்ய முயற்சிக்கு அந்த சாரை சொந்த கட்சியினரே அவரை புறம் தள்ளி பல வருடமாகி விட்டது என்கிறார்கள் துங்கா நகர் வலது சாரி சிந்தனையாளர்கள்.

மேலும் போலி ஐடி கள் மூலம் பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை அவதூறு பரப்பும் இந்த பெண்ணுக்கு தேவையான போலி ஐடி களை உருவாக்கி கொடுப்பதில் தொடங்கி, தலைவர்களை போட்டோ ஷாப் மூலம் இழிவாக சித்தரிப்பது வரை துணையாக இருக்க கூடியவர், ஓட்ட உடைசல் வாகனங்களை இது தரமான வண்டி என ஏமாற்றி விற்க கூடிய போர்ஜரி ஒருவன் தான் என்கிறார்கள் துங்கா நகர் வலதுசாரி சிந்தனையாளர்கள்.