தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருடங்களுக்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா, அதன் பின்பு பீகார் சட்டசபை தேர்தல் காரணமாக அங்கே பிஸியாகிவிட்டார். தற்பொழுது பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தன்னுடைய முழு கவனத்தையும் தமிழகம் பக்கம் திருப்பி இருக்கிறார். குறிப்பாக இந்தியாவில் உள்ள சவால் மிக்க மாநிலமான மேற்கு வங்கத்தில் கடந்த சட்டசபை தேர்தலிலேயே ஆழமாக காலூன்றி எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கு பாஜக, அடுத்து வர இருக்கும் மேற்குவங்க சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது பாஜக.
அதேபோன்று கேரளாவில் சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் சில மாநகராட்சிகளை கைப்பற்றி அங்கேயும் பாஜக கால் பதித்து விட்டது. இப்படி இந்தியா முழுவதும் தன்னுடைய ஆழமான தடத்தை பதித்த பாஜகவிற்கு தற்பொழுது மிகப்பெரிய சவாலாக இருப்பது தமிழகம். அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்து தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமித்ஷா தன்னுடைய முழு கவனத்தையும் தமிழகம் பக்கம் திருப்பி இருக்கிறார்.

மேலும் அமித்ஷா பீகார் ஃபார்முலாவை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன்பு மகளிர்க்கு பத்தாயிரம் போன்ற பல தேர்தல் வாக்குறுதிகள் அளித்தது பாஜக கூட்டணி, குறிப்பாக பீகார் சட்டசபை தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது மகளிர் வாக்குகள்.
அந்த வகையில் பீகாரில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தி பீகார் ஃபார்முலாவை பின்பற்றிய தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கான வியூகத்தை அமித்ஷா வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தபோது , தமிழகத்தில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ள 80 தொகுதிகளுக்கான பட்டியலை கொடுத்திருக்கிறார்.
குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெறும் 20 தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிட்டது. ஆனால் அதன் பின்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனியாக கூட்டணி அமைத்து தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்து காட்டியிருந்தது. அந்த வகையில் இம்முறை ஒரு நாடாளுமன்றத்திற்கு ஒரு தொகுதி விதம் குறைந்தது 40 தொகுதிகளாவது பாஜக போட்டியிட வேண்டும் என்பதே அமித்சாவின் முடிவும் கூட.
அந்த வகையில் தற்பொழுது நயினார் நாகேந்திரன் அமித்ஷாவிடம் கொடுத்த சுமார் 80 தொகுதி காண பட்டியலில் 60 தொகுதிகள் ஃபில்டர் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த 60 தொகுதிகளில் இருந்து குறைந்தது 40 தொகுதி யாவது பாஜக போட்டியிட வேண்டும் என்பதே டெல்லி பாஜகவின் தலைமையின் இறுதி முடிவும் கூட.
அந்த வகையில் ஆரம்பத்திலேயே எடப்பாடி பழனிச்சாமி இடம் 60 தொகுதிக்கு மேல் கேட்க தொடங்கி இருக்கிறதாம் பாஜக, ஆனால் இறுதியில் 40 தொகுதிகளில் பாஜக நிச்சயம் போட்டியிடும் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி உடன் பியூஸ் கோயல் சந்தித்து பேசிய போது தொகுதி பங்கீடு பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. குறிப்பாக பாஜக நிலைப்பாடு என்ன எத்தனை தொகுதிகள் வேண்டும் என பல விஷயங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் பியூஸ் கோயல் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

