பாஜக செய்த தரமான சம்பவம்… மூச்சு விடாமல் திரும்பி சென்ற கனிமொழி… இப்ப தெரிகிறதா பாஜக பவர்…

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப தூண் குறித்து விவகாரம் விஷ்வரூபம் எடுத்து வந்து கொண்டிருக்கையில், மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூண் நில அளவை கல் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்து இருந்தது, முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கு உள்ளது. குறிப்பாக நேரடியாக கனிமொழிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுமக்கள் உட்பட பாஜகவினர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

குறிப்பாக வருடம் வருடம் கார்த்திகை தீப தினம் அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் முயற்சி செய்வது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்வதும் வாடிக்கையாகி இருந்து வந்தது. குறிப்பாக சில மணி நேரம் மட்டுமே இந்த விவகாரம் பேசு பொருளாக கடந்த காலங்களில் இருந்து வந்தது.

ஆனால் கார்த்திகை தீபம் முடிந்து ஒரு மதமாகியும் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப தூண் விவகாரம் தமிழக முழுவதும் உயிரோட்டமாக இருக்கும் வகையில் தொடர்ந்து பேசும் பொருளாக இருந்து வருகிறது இதற்கு முக்கிய காரணம், பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரம் மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இது மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது, சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் மதுரையில் கார்த்திகை தீப விவகாரம் ஒருபக்கம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கையில், சமீபத்தில் நலத்திட்டம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திமுக எம்பி கனிமொழி மதுரை உசிலம்பட்டி பகுதிக்கு வந்தார். கனிமொழி உசிலம்பட்டி வரும் தகவல் அறிந்த மதுரை பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் உசிலம்பட்டி வரும் கனிமொழிக்கு தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்ய திட்டமிட்டனர்.

அதன் படி மதுரை விமானம் நிலையம் வரும் கனிமொழி , அவர் கலந்து கொள்ள கொண்ட நிகழ்ச்சி நடந்த உசிலம்பட்டி வரை, இடையில் சுமார் 7 இடங்களில் கனிமொழிக்கு எதிராக கருப்பு கோடி காட்டி ,திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் கார்த்திகை தீப தூண் நில அளவை கல் என தெரிவித்த கனிமொழிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆயத்தமாகி கொண்டிருந்தனர்.

இந்த தகவல் காவல்துறை கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து காவல் துறை தரப்பில் மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கத்தை தொடர்பு கொண்டு, நலத்திட்ட நிகழ்வுக்காக வருகிறார் திமுக எம்பி கனிமொழி நீங்கள் இந்த நேரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதை கைவிட வேண்டும் என காவல் துறை தரப்பில் இருந்து பாஜக மாவட்ட தலைவர் சிவலிக்கத்திடம் பேசப்பட்டது, மேலும் பாஜக தலைமையும் நலத்திட்ட நிகழ்வுக்காக வரும் கனிமொழி எம்பிககு எதிராக எந்த ஒரு ஒரு நிகழ்வும் நடந்த வேண்டாம் என தெரிவித்ததை தொடர்ந்து கனிமொழிக்கு எதிராக கருப்பு கோடி காட்ட ஆயத்தமாக இருந்த பாஜகவினர் கருப்பு கொடி கட்டுவதை கைவிட்டனர்.

இருந்தும் உசிலம்பட்டி வரும் கனிமொழி நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து சர்ச்சை குரிய வகையில் எதாவது கருத்து தெரிவித்தால், திரும்பி வரும் போது கருப்பு கொடி காட்டும் திட்டத்தில் இருந்தனர் பாஜக மற்றும் இந்து அமைப்பினர், ஆனால் மதுரையில் தனக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை புரிந்து கொண்ட கனிமொழி திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் கப் சிப் என சென்றது, எங்கேயே இருந்து கொண்டு தீப துணை நில அளவை கல் என்று சொன்ன கனிமொழியை எம்பியை எங்கே மதுரையில் வந்து சொல்லி பார் என சவால் விடும் வகையில் இருந்தது பாஜகவினரின் இந்த செயல்.