கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அரசு ஊழியர்கள், மற்றும் ஒப்பந்த செவிலியர்களுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள், அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள். 2021 தேர்தலின் போது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியில், பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
அதாவது இந்தத் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெறுவதர்க்கு முன்பு கடைசியாக பெற்ற ஊதியத்தின் 50 சதவீதம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும், ஊழியர் பங்களிப்பு தேவையில்லை என்றும் திமுக வாக்குறுதி கொடுத்து இருந்தது, அனால் திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு ஆன நிலையில், Contributory Pension Scheme யை ரத்து செய்யப்படாததால், மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 2020-ல் கொரோனா காலத்தில் நிதிச்சுமையை காரணமாக்கி நிறுத்தப்பட்ட சரண்டர் லீவ் பணம் இதுவரை மீண்டும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக 2025-ல் JACTO-GEO உள்ளிட்ட சங்கங்கள் நடத்திய போராட்டங்களுக்கும், திமுக அரசின் தரப்பில் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஊழியர்களிடையே கடும் அதிருப்தி திமுக அரசுக்கு எதிராக நிலவி வருகிறது.
மேலும் Group-D பணிகள், மாநகராட்சி வேலைகள் உள்ளிட்ட பல துறைகளில் அவுட்சோர்சிங் முறையை விரிவுபடுத்தும் திமுக அரசின் திட்டங்களுக்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காரணம் இதனால் நிரந்தர வேலை இழப்பு, போன்ற பல ஆபத்துகள் இருப்பதாக எச்சரிக்கின்றனர் சங்கங்கள்.
மேலும் இதற்கு முன்பு பணியில் இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது, ஆகையால் இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு 25% ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுமட்டுமின்றி அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் போராட்டமும் தீவிரம் அடைந்து வருகிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு ₹26,000 யும், உதவியாளர்களுக்கு ₹21,000 யும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஆனால் இது போன்ற போராட்டங்களுக்கு திமுக அரசு இதுவரை செவி சாய்க்காமல் மெத்தன போக்கில் இருந்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஊழியர்களுக்கு அதிக வேலைச்சுமை ஏற்படுகிறது, மேலும் குறை தீர்க்கும் அமைப்புகள் செயல்படாத சூழல் உருவாகி இருக்கிறது, இப்படி அரசு இயந்திரமே செயல்படாமல் முடங்கும் வகையில் சாதனை புரிந்துள்ளது கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சி.
தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த DMK அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமால் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருவது மட்டுமின்றி, உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்களின் போராட்டங்களை அடக்க கைது நடவடிக்கைகள், சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழிலார்கள் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. இந்நிலையில் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசு ஊழியர்களில் போராட்டமே திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து விடும் சூழலை உருவாக்கி உள்ளது.

