விஜய் உடன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தி வரும் காங்கிரஸ் , கிட்டதட்ட விஜய் உடன் கூட்டணி செல்ல தயாராகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் இருந்து எப்படி வெளியேறுவது என்று திட்டமிட்டு வரும் காங்கிரஸ், அவ்வப்போது காங்கிரஸ் முக்கிய தலைவர்களை திமுகவுக்கு எதிராக பேசவிட்டு திமுக தலைமையை சீண்டி வருகிறது.
இந்நிலையில் த வெ க உடன் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல இருக்கும் தகவல் அறிந்த திமுக தலைமை, 25 சீட்டுக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கூடுதலாக கிடையாது, கூட்டணியை விட்டு வெளியேறினால் பரவாயில்லை , ஆனால் நாம் விரட்ட வேண்டாம் அவர்களாகவே வெளியேறட்டும் என்கிற முடிவில் இருக்கிறது திமுக தலைமை. ஆனால் திமுக கூட்டணியை விட்டு வெளியேற காரணம் தேடி வருகிறது காங்கிரஸ்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய திமுக எம்பி கனிமொழி, அதிமுக ஆட்சியை விட்டு விலகியபோது, தமிழ்நாடு எந்தவித வளர்ச்சியும் இல்லாமல், கடன்சுமையால் சூழப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. தற்போது திமுக தமிழ்நாட்டை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக மாற்றியுள்ளது” என கனிமொழி எம்பி தெரிவித்து இருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளியும் மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் மிக நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி, அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில், தமிழகத்தில்தான் நிலுவையிலுள்ள கடன் தொகை மிக அதிகமாக உள்ளது. 2010 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் கடன் தொகை தமிழகத்தைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது. தற்போது, தமிழகத்தின் கடன் தொகை உத்தரப் பிரதேசத்தை விட அதிகமாக உள்ளது.
வட்டிச் சுமை சதவீதமானது, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவுக்குப் பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன்/மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், கரோனாவுக்கு முந்தைய நிலைமையை விட இன்னும் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.” என மறைமுகமாக திமுக ஆட்சியில் தமிழகம் கவலைக்கிடமாக இருக்கிறது ஏன் குறிப்பிட்டிருந்தார் பிரவீன் சக்கரவர்த்தி.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்து கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரியங்கா காந்தியின் அறிவுறுத்தலின் படியே பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் திருச்சி வேலுசாமி ஆகியோர் திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதே வேளையில் விடுதலை சிறுத்தை கட்சியில் ஆதவா அர்ஜுனா இருந்த போது, திமுகவை நோக்கி ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு தரவேண்டும் என கேள்வி எழுப்பியதற்காக கூட்டணியில் குழப்பம் ஏற்ப்படுத்துகிறார் ஏன் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்து விசிக கட்சியில் இருந்து ஆதவா அர்ஜுனாவை நீக்க வைத்த திமுக, காங்கிரஸ் முக்கிய புள்ளி பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் திருச்சி வேலுசாமி மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க ஏன் திமுக அழுத்தம் கொடுக்க தயங்குகிறது.
அல்லது திமுக அழுத்தம் கொடுத்தும் கூட, பேச சொல்வதே நாங்கள் தான் என திமுகவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை காங்கிரஸ் தலைமை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

