இந்திய வரலாற்றிலேயே இப்படி ஒரு ஊழல் மாநில அளவில் நடந்தது இல்லை என்று சொல்லும் அளவிற்கு கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் அமலாக்கத்துறை சோதனையில் ஒவ்வொரு ஊழலாக வெளிவந்து இந்தியாவையே அதிர்ச்சிக்கு ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் தொடர்பான வழக்கில் திமுக அரசை மிகக் கடுமையாக சாடி இருந்தது நீதிமன்றம்.
அதாவது அமலாக்கத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று இரண்டு முறை கடிதம் எழுதியும் தமிழக காவல்துறை இதுவரை எஃப் ஐ ஆர் செய்யவில்லை. அப்படி இருக்கையில் சவுக்கு சங்கரை அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும், அமலாக்கத்துறை ஆதாரங்கள் கொடுத்தும் கே என் நேரு மெது எஃப் ஆர் செய்யாத தமிழக அரசை சம்பட்டி அடி கொடுத்திருந்தது நீதிமன்றம்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏலக்காய் ட்ரேடரில் சுமார் ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. அதாவது ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி விதிப்பு மட்டும் என்றால், குறைந்தது 6000 கோடி ரூபாய்க்கு வருடத்திற்கு இந்த நிறுவனம் ம் வர்த்தகம் செய்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது .
அப்படி இருக்கையில் ஏலக்காய் தொழிலில் 6000 கோடிக்கு வர்த்தகம் செய்யும் அளவிற்கு எப்படி சாத்தியமானது என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக ஏலக்காய் ட்ரேடர்ஸ் மூலம் இவ்வளவு வர்த்தகம் செய்தோம் என்று போலி கணக்குகளை கூட காட்டக்கூடும். அந்த வகையில் சம்பந்தப்பட்ட அந்த ஏலக்கா டிரேடர்ஸிடம் 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திர்கள் என்றால், யார் யாருக்கு எவ்வளவு ஏலக்காய் வர்த்தகம் செய்தீர்கள்.?
எந்த டிரான்ஸ்போர்ட் பயன்படுத்துவீர்கள் என்கின்ற பல கேள்விகளை இனிவரும் காலங்களில் அமலாக்கத்துறை விசாரணை மூலம் கேட்க இருக்கிறது.இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த ஏலக்காய் ட்ரேடர்ஸ் குள் கருப்பு பணம் ஏது வந்திருக்கிறதா.? என்கின்ற சந்தேகம் வலுத்து வரும் நிலையில், கடந்த வருடம் சுமார் 1500 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் முதல் குடும்பத்தை சேர்ந்த மாப்பிள்ளை சார் வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஏலக்காய் டிரேடர்சில் மாப்பிள்ளை சாரின் கருப்பு பணம் உள்ளே வந்திருக்கிறதா என்கின்ற சந்தேகம் அமலாக்கத்துறைக்கு எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, மேலும் சென்னையில் ஒரு நிறுவனத்தில் நடந்த சோதனையில் சுமார் 1000 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனமும் சுமார் 10,000 கோடி வரை வர்த்தகம் செய்ததாகவும், அந்த வகையில் இந்த நிறுவனத்திற்கு உள்ளேயும் முதல் குடும்பத்தைச் சேர்ந்த பணம் உள்ளே வந்திருக்கிறதா என்கின்ற சந்தேகம் அமலா துறைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்திய அரசு திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில், இதுவரை நடந்த அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்ற ஆதாரங்களைகையில் எடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே டாஸ்மாக் ஊழல் தொடர்பான சோதனை, செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை மற்றும் கே என் நேரு மீது நடந்த சோதனை மட்டும் இன்றி முதல் குடும்பத்தை நோக்கியும் அமலாக்கத்துறை நகர்த்துகிறது.

