அதிமுக கூட்டணி குறித்து விஜய் சொன்ன மெசேஜ்… ரூட்டை மாற்றும் எடப்பாடி… தலைகீழாக மாறிய தமிழக தேர்தல் களம்…

0
Follow on Google News

தமிழக வெற்றிக்கழக ஈரோடு பொதுக்கூட்ட நிகழ்வுக்கு பின்பே தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக விஜயின் கரூர் சம்பவத்திற்கு பின்பு நடந்த மிகப்பெரிய கூட்டம் ஈரோடு நிகழ்வு. இதற்கு முன்பு நடந்த விஜயின் மாநாடு, பொதுக்கூட்டம், மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் கட்டுப்பாடே இல்லாத கூட்டம் என்கிற அடைமொழியுடன் இருந்த த வெ க,

ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு பின்பு த வெ க மீது இருந்த அந்த கட்டுப்பாடற்ற கூட்டம் என்கின்ற சாயல் விலகி இருக்கிறது. அந்த வகையில் ஈரோடு பொதுக்கூட்ட நிகழ்வு மூலம் செங்கோட்டையன் விஜயின் மிக நம்பிக்கை கூறியவராக இடம்பெற்று விட்டார். அதற்கு முன்பு கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் பெரும் திரளாக மக்கள் கூடியிருந்தார்கள்.

இப்படி ஒரு சூழலில் செங்கோட்டையன் கோட்டையிலேயே எடப்பாடி பழனிச்சாமி பெரும் கூட்டத்தை கூட்டி விட்டார் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால் ஈரோடு கூட்டம் மூலம் தன்னுடைய பலத்தையும் செங்கோட்டையன் நிரூபித்து விட்டார், இந்த நிலையில் ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் அதற்கு முன்பு வரை எம்ஜிஆரை பல மேடைகளில் தூக்கி பிடித்தவர் தற்பொழுது செங்கோட்டையன் வருகைக்குப் பின்பு ஜெயலலிதாவை தூக்கி பிடிக்க தொடங்கி இருக்கிறார்.

ஜெயலலிதா சொன்ன தீய சக்தி திமுக என்கின்ற வார்த்தையை குறிப்பிட்டு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் இருவருமே எங்களுக்குச் சொந்தம் என கொண்டாடத் தொடங்கி விட்டார் விஜய். அதிமுக குறித்து விஜய் இந்த கூட்டத்தில் பேசாமல் கடந்து சென்று , திமுகவை மிகக் கடுமையாக தாக்கி பேசியதன் மூலம் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக தாவேகாவுக்கு இடையிலான களமாக உருவாக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது.

அந்த வகையில் திமுகவை மிக கடுமையாக எதிர்ப்பதன் மூலம் திமுக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்யலாம் என்கின்ற கோணத்திலும், அதே நேரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரையும் தூக்கி பிடிப்பதால் அதிமுகவுக்கான ஆதரவு வாக்குகளையும் தன் பக்கம் இழுக்க முடியும் என்பதால் தான் விஜய் கடந்த ஈரோடு கூட்டத்தில், திமுகவை மிகக் கடுமையாக தாக்கி, அதிமுக பற்றி எதுவும் பேசாமல் கடந்து சென்று இருக்கிறார்.

அதே நேரத்தில் பாஜக பற்றியும் பெரும் அளவு விமர்சனம் செய்யாமல் கடந்து சென்ற விஜய், மேலும் அதிமுக வாக்குகளை அறுவடை செய்வதற்காக தான் ஜெயலலிதா எம்ஜிஆர் ஆகியோரை தற்போது கையில் எடுத்திருக்கிறார் விஜய் என்கின்றது அரசியல் வட்டாரங்கள். இந்த நிலையில் விஜய் அதிமுக கூட்டணிக்கு வர மாட்டார் என்பதை ஈரோடு பொதுக்கூட்டத்தில் தன்னுடைய பேச்சின் மூலம் மறைமுகமாக அதிமுகவுக்கு மெசேஜ் சொல்லி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தன்னை நோக்கி வருவார் என்று காத்திருந்து காலம் தாழ்த்தாமல் தனக்கான வியூகத்தை மாற்ற எடப்பாடி முடிவு செய்து, அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டார் என்றும் எடப்பாடி, ஒரு பக்கம் விஜய்

மறுபக்கம் திமுக இந்த இரண்டையும் எப்படி கையாள்வது, அதே நேரத்தில் திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரிந்து விடக்கூடாது, அதிமுக ஆதரவு வாக்குகளையும் விஜய் பெற்றுவிடக்கூடாது, அதற்கான வியூகங்களை தற்போது எடப்பாடி பழனிச்சாமி வகுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தேர்தல் நெருங்க நெருக்க விஜய்யின் அரசியல் நகர்வுகளும் அதிகரித்து வருவதால், விஜய் வருகை அதிமுக திமுக இரன்டு கட்சியில் ஒருவருக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பதால், திமுக – அதிமுக இரன்டு கட்சிகளின் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்கும் இடத்தில் தற்பொழுது விஜய் உள்ளார்.