பிரியங்கா காந்தி – விஜய் சந்திப்பு… உறுதியான காங்கிரஸ் – தவெக கூட்டணி… கடும் அப்செட்டில் திமுக…

0
Follow on Google News

தவெக உடன் கூட்டணி அமைப்பதற்காக தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவரும் முதல் வருமான மு க ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள், வரும் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் காங்கிரஸுக்கு சுமார் 70 தொகுதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள்.

ஆனால் இதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் பிடி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால் கூட பரவாயில்லை, கடந்த முறை கொடுத்த தொகுதியில் இருந்து ஒரு தொகுதி கூட அதிகமா தரப்பட மாட்டாது, குறிப்பாக கடந்த முறை கொடுத்த தொகுதியில் இருந்து இன்னும் சில தொகுதிகள் குறைப்பதற்கு தான் வாய்ப்பு உள்ளது என்பதில் முதல்வர் மு க ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் திமுக வெற்றி வாய்ப்பு இழந்து விடும் அதனால் நிச்சயம் கேட்கும் தொகுதியை முதல்வர் மு க ஸ்டாலின் கொடுத்து விடுவார் என்று காங்கிரஸ் ஒரு பக்கம் நெருக்கடி கொடுக்க, தாங்கள் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி அந்தஸ்தில் உட்கார்ந்துதாலும் பரவாயில்லை, ஆட்சியில் பங்கு கொடுக்கும் அளவிற்கு அதிக தொகுதிகளை ஒதுக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதல்வர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்த நிலையில், தற்பொழுது க காங்கிரஸ் மேலிடம் ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறது. அதில் தென்னிந்தியாவை பொறுத்த அளவு பிரியங்கா காந்தியிடம் காங்கிரஸை ஒப்படைப்பது, வட இந்தியாவைப் பொறுத்தளவு ராகுல் காந்தியிடம் காங்கிரஸை ஒப்படைத்து உள்ளது.

அந்த வகையில் தென்னிந்திய அரசியலில் ராகுல் காந்தியை தலையிடக்கூடாது என காங்கிரஸ் மேல் இடம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து தற்பொழுது விஜயுடன் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார் பிரியங்கா காந்தி என்றும் கிட்டத்தட்ட இந்த கூட்டணி உறுதியாகிவிட்டது என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக காங்கிரஸ் திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் பொழுது, அவரை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகளும் வருந்துவதற்கான வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது, காரணம் விஜய் அதிக தொகுதிகளை கொடுப்பது மட்டுமல்லாமல் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார்.

மேலும் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற இடங்களிலும் காங்கிரஸ் இன்னும் வலுவாக கால் ஊன்றும், அதற்கு விஜயின் சினிமா முகம் உதவும் என்று நம்புகிறது காங்கிரஸ் தலைமை, இந்த நிலையில் ராகுல் காந்தி சமீபகாலமாக திமுகவுக்கு சாதகமாக இருந்த நிலையில் தற்போது பிரியங்கா காந்தி காங்கிரசின் எதிர்காலம் கருதி தவெகவுடன் கூட்டணி அமைப்பது தான் சரி என் முடிவு செய்துவிட்டாராம்.

மேலும் பிரியங்கா காந்திக்கு சென்ற சில தனியார் நிறுவனங்கள் கொடுத்த சர்வே ரிப்போர்ட்டும் தவெக வலுவான கூட்டணி அமைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க கூட வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது, அந்த வகையில் ஐந்து அமைச்சர் துணை முதல்வர் உட்பட்ட பல ஆபர்களை விஜய் காங்கிரசுக்கு வைத்த நிலையில், தற்பொழுது காங்கிரஸ் தவெக கூட்டணி கிட்டத்தட்ட 90% உறுதி ஆகிவிட்டது என்று இந்த தகவல் வெளியாகி உள்ளது.