திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த SIR … தொகுதி மாறும் முக ஸ்டாலின் … இப்ப தெரிகிறதா ஏன் SIR க்கு எதிராக திமுக கூச்சலிட்டது…

0
Follow on Google News

போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டிருப்பவர்கள், இறந்துபோனவர்கள் ஆகியோரை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி ஜனநாயக முறைப்படி நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளின் நோக்கம், இதற்கான பணிகளை தேர்தல் நடக்க இருக்கும் மாநிலம் தோறும் தேர்தல் ஆணையம் தீவிர படுத்தி வருகிறது.

அந்த வகையில் அடுத்த சில மாதங்களில் தமிழக்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர்கள் சீர்திருத்தும் பணியை மிக தீவிரமாக நடத்தி முடித்துள்ளது தேர்தல் ஆணையம், ஆனால் SIR பனி தொடங்குவதற்கு முன்பே திமுக உட்பட எதிர்கட்சிகள் SIR க்கு எதிராக கடும் எதிப்பு தெரிவித்து வந்தனர். ஆர்ப்பாட்டம் போராட்டம் என நடனத்தினாலும், போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு தானே நீக்க போகிறார்கள், இதற்கு எதற்கு திமுகவினர் கூச்சலிடுகிறார்கள் என தமிழக மக்கள் திமுகவினரின் SIR எதிரான பிரச்சாரத்திற்கு ஆதரவை கொடுக்க வில்லை.

இந்நிலையில் SIR யை திமுக ஏன் கடுமையாக எதிர்த்தது என்பதற்கு தற்பொழுது விடை கிடைக்கும் வகையில் SIR பணிகள் முடிந்து வெளியாகி உள்ள ரிப்போர்ட் தமிழக மக்களுக்கு மட்டும் இல்லை இந்தியா முழுவதுமே அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலின்படி 6.41 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.

இந்நிலையில் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் அடிப்படையில் வெளியாகி உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், சுமார் 15.2 சதவிகிதம் அதாவது கிட்டத்தட்ட 1 கோடி பேர் போலி வாக்காளர் என அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு நீக்கப்பட்டு 5.44 கோடி வாக்காளர்கள் இருப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது கட்டமாக தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எங்குமே இல்லாத அளவில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவிலான போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக தொடர்ந்து கடந்த 8 வருடங்களாக நடந்த அணைத்து தேர்தலில் திமுக தொடர் வெற்றியை பெற்று வரும் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மட்டும் 14,25,018 வாக்காளர்களின் பெயர் போலி என அடையாளம் கண்டு நீக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளவர்களில் இறந்தவர், இடம் பெயர்ந்தவர், இரட்டை பதிவு என மொத்தமாக சென்னையில் மட்டுமே 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் அடையாளம் கண்டு நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் எஸ் ஐ ஆர் பணிக்கு முன்பு 40 லட்சத்து 4 ஆயிரம் வாக்காளர்கள் இருந்த நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு பிறகு 25 லட்சத்து 79 ஆயிரம் வாக்காளர்கள் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 35% நீக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னையில் மட்டும் மூன்றில் ஒரு பகுதியினர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள மொத்தம் 14,25,018 பேரில் அதிகபட்சமாக 12,22,164 பேர் இடம் மாறியவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களில் 1,56,555 பெயர்கள், அதேபோல தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என்று 27,328 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், இரட்டை பதிவு என்ற முறையில் 18,772 பேரும் மற்ற காரணங்கள் என 199 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்

இதில் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கொளத்தூர் தொகுதி மக்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள நிலையில் தற்பொழுது சுமார் 1 லட்சம் வாக்குகள் கொளத்தூர் தொகுதியில் மட்டும் நீக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தொகுதி மாறி போட்டியிடலாம் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.