திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை திருநாளன்று தீபம் ஏற்ற உத்தரவிட்ட நிலையில், கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றவில்லை. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை திமுக அரசு நிறைவேற்றாமல், இரு நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில் திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்றால் அதற்கு தமிழக அரசே காரணம். கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவது பொது அமைதியை சீர்குலைக்கும் என்பது அபத்தமானது என தெரிவித்த நீதிபதிகள்.

மேலும் அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டுள்ளது என கடுமையாக சாடிய நீதிபதிகள், அரசியலுக்காக எந்த மாநிலமும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படக் கூடாது என அறிவுறுத்தினார்கள், மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத் தூண் தர்காவுக்கு சொந்தமானது என்ற வாதம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என தெரிவித்த நீதிமன்றம்.
மேலும் தீபத் தூண் கோயில் நிர்வாகத்துக்கே சொந்தம், கார்த்திகை தீபமானது மலை உச்சியில் இருக்கும் தீபத் தூணில் கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஹிந்து மற்றும் முஸ்லிம் பண்டிகைகளின்போது இரு தரப்பினரும் ஒருவரைக்கொருவர் தொந்தரவு செய்யாமல் அவரவர் பண்டிகையை கொண்டாடிக் கொள்ளலாம். தனி நீதிபதி சுவாமிநாதனின் அனைத்து உத்தரவுகளும் செல்லும் என உறுதி படுத்தியுள்ளது நீதிமன்றம்.
இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் முடித்துவைத்த நிலையில், தீர்ப்பு வந்த சில நிமிடத்தில் சட்ட துறை அமைச்சர் ரகுபதி பேசிய பேச்சு மிக பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது, அது தீபத்தூண் என்பது தான் என்று யாராவது ஆதாரப்பூர்வ சான்று சமர்ப்பித்தார்களா? என கேள்வி எழுப்பிய ரகுபதி.
மேலும் வழக்கத்தில் இல்லாத ஒன்று நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும் என்பது தான் மக்களின் கேள்வி. அரசு அன்றே 144 தடை உத்தரவு போடப்படாமல் இருந்திருந்தால் அன்றே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டு இருக்கும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு இருப்பது சட்டத்திற்கு முரணானது. தீபம் ஏற்ற அனுமதித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது.
இல்லாத ஒன்றை புகுத்தாதீங்க என்பதே எங்களது கோரிக்கை. இல்லாத ஒன்றை கொண்டு வருவது என்ன நியாயம்.. மலை மீது இருப்பது தீபத்தூண் கிடையாது என திமுக அமைச்சர் பேசி பேச்சு முருக பக்தர் மத்தியில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ளது. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப தூண் தொடர்பாக தீர்ப்பு வந்தவுடன் இனிப்பு வழங்கி கொண்டாடிய பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினருக்கு திமுக அமைச்சரின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பிடிவாதமாக இந்தத் தடையைத் தொடர நினைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்பரங்குன்றம் தீப விவகாரம் இப்போது மதுரையைத் தாண்டி டெல்லி உச்சநீதிமன்றத்திற்கு நகர்வதால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு கிடைக்க இன்னும் சில காலம் எடுத்தாலும் அங்கேயும் திமுக அரசு அசிங்கப்பட்டு தான் திரும்பும் என்கிறார்கள் முருக பக்தர்கள்.

