தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சமீபத்தில் கோவையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது, அந்த மேடையில் பேசிய நயினார் நாகேந்திரன், நானும், அண்ணாமலையும் கும்மியாட்டம் ஆடினோம். நாங்கள் இருவரும் இன்னொரு ஆட்டம் ஆடப் போகிறோம்.அந்த ஆட்டம் நரேந்திர மோடி, அமித்ஷா என்ன நினைத்து இந்த கூட்டணியை உருவாக்கினார்களோ, அதை நிறைவேற்றுவதற்கான ஆட்டம் இனிமேல் தான் இருக்க போகிறது என சூசமாக தெரிவித்து இருந்தார் நயினார் நாகேந்திரன்.
இந்த சூசகமான பேச்சுக்கான விடை என்ன என்பதற்கான பதில், அண்ணாமலைக்கு எதோ தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வர இருக்கிறது என ஆருடங்கள் தெரிவித்தன, அந்த ஆருடங்கள் அனைத்தும் உண்மை என உறுதி படுத்தும் வகையில் தற்பொழுது டெல்லியில் அடுத்தடுத்து பல நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவி காலம் முடிந்து நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக பொறுப்பேற்ற உடனே முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா பகிரங்கமாக தெரிவித்து இருந்தார்.

ஆனால் மாநில தலைவர் மாற்றம் நிகழ்த்து மாதங்கள் உருண்டோடினாலும் பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தேசிய நிர்வாக பட்டியல் வெளியாவதில் தாமதமாகி வந்தது, இதனால் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது, இருந்தும் புதிய பாஜக தேசிய தலைவர் நியமிக்க பட்ட பின்பு அண்ணாமலைக்கு, தேசிய இளைஞரணி தலைவர் பொறுப்பு அல்லது தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படும் என டெல்லியில் இருந்து வந்த தகவல் உறுதி படுத்தியது.
இந்நிலையில் பாஜக தேசிய செய்லதலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவரே தேசிய தலைவராகவும் நியமிக்க படுவார், காரணம் இதற்கு முன்பு பாஜகவில் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டவர்களே தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிதின் நபின் போன்ற ஒரு இளைஞருக்கு தேசிய தலைவர் வாய்ப்பு கொடுத்ததில் அடிப்படையில் தேசிய நிர்வாக பட்டியலில் அண்ணாமலை போன்ற இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு உண்டு என்பதை உறுதி படுத்தியது நிதின் நபின் நியமனம்.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து சென்ற நிலையில் அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்திருக்கிறது, இதனை தொடர்ந்து டெல்லி சென்ற அண்ணாமலை இரண்டாம் கட்ட பாஜக தேசிய தலைவர்களுடன் சீராய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். குறிப்பாக இந்த சீராய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் அடுத்து நியமிக்க பட இருக்கும் தேசிய நிர்வாக பட்டியலில் இடம் பெற இருக்கிறார்கள்.
அந்த வகையில் தேசிய பொதுச் செயலாளர் உட்பட தேசிய நிர்வாக பட்டியலில் இடம் பெற இருப்பவர்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டு, இந்த சீராய்வு கூட்டம் நடைபெற்றதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது. இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழக்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு என்ன பொறுப்பு என்பது குறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்ததில் சில முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதில் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு அண்ணாமலைக்கு உறுதி செய்யப்ட்டுள்ளதாகவும், மேலும் தென் மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட இருப்பதாகவும் உறுதி படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அன்னமலையின் பங்கு மிக முக்கியம் என கருதுவதாகவும் கூறப்படுகிறது.

