சமீபத்தில் புதுக்கோட்டை வந்த மத்திய அமைச்சர் அமித்சா மேடையில் நடந்த நிகழ்வு ஒட்டு மொத்த கூட்டத்தையும் கூர்ந்து கவனிக்க வைத்தது. அமித்ஷா குறிப்பிட்டு ஒரு நபரை அழைத்து தட்டி கொடுத்து பேசுகிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை, அமித்ஷா முதுகில் தட்டிய யார் அந்த இராமச்சந்திரன் என்பதை பார்க்கலாம்.
மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட புதுக்கோட்டை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்து வந்த N இராமச்சந்திரன் மேடையின் கீழே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மக்களை ஒழுங்கு படுத்தும் வேலையாக கீழே இறங்கினார், கீழே மக்களை ஒழுங்கு படுத்தும் வேளையில் N இராமச்சந்திரன் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எங்கே N இராமச்சந்திரன் என்று கேட்க,

அங்கே மேடையில் இருந்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உடனே மேடையில் இருந்து கீழே இறங்கி N இராமச்சந்திரனை கையேடு அமித்ஷாவிடம் அழைத்து சென்றார். அமித்ஷா தன் அருகில் N இராமச்சந்திரனை அமரவைத்து அவருடைய முதுகை தட்டி கொடுத்த பின்பே, N இராமச்சந்திரனின் முக்கியத்துவம் பலருக்கு தெரிய வந்தது.
குறிப்பாக இதற்கு முன்பு பிரதமர் மோடி பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை முதுகை தட்டி கொடுத்து இருப்பார், அதன் பின்பு N இராமச்சந்திரன் முதுகை அமித்ஷா தட்டி கொடுத்த நிகழ்வு பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் புருவத்தை உயர்த்தி பார்க்கும் வகையில் அமைத்தது.
திமுகவின் செஸ் ஒலிம்பியாட்டிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தலைமை அறிவுறுத்தலின் படி அன்றைய தலைவரின் தளபதியாக இருந்து KPL க்கு இணையாக மோடி கபடி லீக்கை மதுரையில் நடத்தி 68 ஆண்டுகால திமுகவை திணறடித்து விளையாட்டு பிரிவு ஒன்றை திமுகவில் உருவாக்க வைத்ததில் மிக முக்கிய பங்காற்றியவர் தான் இந்த இராமச்சந்திரன்.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரே தொகுதியில் “என் மண் என் மக்கள்” என்ற மாபெரும் யாத்திரைக்கு 25 ஆயிரம் பொதுமக்களை திரட்டி சாதித்து காட்டியவர் இராமச்சந்திரன். ஒரு காலத்தில் Go back modi என்று சொல்லிய தமிழகத்தில், திருச்சி விமான நிலைய திறப்பு விழாவிற்கு வருகை தந்த பாரத பிரதமருக்கு “மோடி மோடி மோடி” என்று மக்களை ஆர்ப்பரிக்க வைத்து அதே மேடையில் முதல்வர் முக ஸ்டாலின் பேசமுடியாமல் திணறடிக்க செய்து, பின்பு ஆர்ப்பரித்த மக்களை பிரதமரே அமைதி படுத்தி முதல்வரை பேச அனுமதித்த நிகழ்விற்கு மிக முக்கிய பங்காற்றியவர்.
மும்மொழி கொள்கை மாநாட்டிற்க்கு 407 வாகனங்களில் பெரும் திரளாக மக்களை அழைத்து சென்ற இராமச்சந்திரன், மேலும் தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு சேர்த்து ஒரே மாவட்டத்தில் 4 நாட்களில் அதுவும் 96 மணிநேத்தில் 6000 காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுக்கோட்டை வருகையை வரலாறு காணாத அளவில் ஒரு நிகழ்வை நிகழ்த்தி காட்டியது, போன்ற சாதனைகளை உற்று நோக்கி தான் ராமசந்திரன் தோளை தட்டி பாராட்டி இருக்கிறார் அமித்ஷா.
மேலும் N இராமச்சந்திரன் அவருடைய மாவட்டத்தில் 100 சதவிகிதம் பூத் கமிட்டியை நிறைவு செய்து, அவர் மாவட்ட தலைவராக இருக்கும் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஒரு பூத் கூட மிஸ் ஆகாமல் சுற்றுப்பயணத்தை முடித்து இருக்கிறார் N இராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

