திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது தமிழர்களின் பாரம்பரிய மரபு, சிவா வழிபாடு மற்றும் தமிழ் கடவுளான முருக வழிபாடுடன் தொடர்புடையது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா சுமார் 14ம் நூற்றாண்டில் உருவானது என கூறப்படும் நிலையில் , அதற்கு முன்பே திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கார்த்திகை தீப தூண் பழமையானது என்கிறது வரலாறு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என முருக பக்தர்களுக்கு இந்து அறநிலை துறைக்கு இடையிலான நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு காண நீதிமன்றத்தை அணுகினார்கள் முருக பக்தர்கள், சுமார் 100 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக நீதிமன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டும் அதை திமுக அரசின் கீழ் இயக்கும் அறநிலை துறை நடைமுறை படுத்தவில்லை.

குறிப்பாக மாற்று மதத்தினர் யாருமே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி இந்துக்களின் உரிமையான கார்த்திகை தீபா தூணில் தீபம் ஏற்றுவதற்கு தடையாக இருந்தது திமுக அரசு. இதனால் CISF பாதுகாப்பு உடன் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தும் அதற்கும் 144 தடை உத்தரவிட்டு தடுத்து நிறுத்தியது தமிழக அரசு.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து திமுக அரசு மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டு, இதற்கு முன்பு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்ற பெயரில் திமுக அரசு தரப்பில் முன்வைத்த வாதம் முற்றிலும் பொய் என்றும் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராக நிறுத்த தங்கள் வசதிக்காக சொன்ன காரணம் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று நீதிமன்றம் மிக கடுமையாக அரசுக்கு எதிரான தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தன்னை மதசார்பின்மை என்று வெளியில் திமுக அரசு காட்டி கொண்டாலும் கூட, இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்கிற குற்றசாட்டு இந்துக்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் இந்து அறநிலை துறை என்கிற ஒரு துறையை வைத்து கொண்டு, கோவில் வழிபாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கு அரசு, கோவில் வருமானத்தை அரசு நிதிக்கு பயன்படுத்தும் இந்த அரசு, தேவாலய நிதிகள் , வக்ஃப் நிலங்களை ஏன் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர தயங்கிறது என்கிற கேள்வி இந்துக்கள் மத்தியில் எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது.
மேலும் தொடர்ந்து இந்துக்களை குறிவைத்து திமுக தலைவர்களின் பேச்சுக்கள் வாடிக்கையாக உள்ளதை கடந்து செல்ல முடியாது.“சனாதன தர்மம் டெங்கு போல ஒழிக்கப்பட வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு, சனாதனத்தை HIV, குஷ்டரோகம் என ஒப்பிட்டு திமுக எம்பி ஆ ராசா பேசிய பேச்சு என அடுக்கி கொண்டே போகலாம்,
ஆட்சியாளர்கள் மத்தியில் இந்துக்களுக்கு நீதி நிகைக்கவில்லை என நீதிமன்றத்தை நாடி கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பை பெற்று வந்தாலும் கூட அந்த தீர்ப்பை கூட அமல்படுத்த விடாமல் இந்துக்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு வரும் 2026 தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்கிறார்கள் தமிழக இந்துக்கள்.

