அமித்ஷா – விஜய் சந்திப்பு…. உறுதியாகும் பாஜக – தவெக கூட்டணி… முடிந்தது திமுக ஆட்சி…

0
Follow on Google News

சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியை அழைத்து தமிழக அரசியல் கூட்டணி குறித்து பேசி இருக்கிறார், அப்போது அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும், மேலும் பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் அனைத்தையும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக நடிகர் விஜய்யையும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என தெரிவித்த அமித்ஷா.

மேலும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக என்கின்ற கட்சி ஒன்றும் இல்லாமல் சென்று விடும், எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது, உங்களுடைய கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால் ஈகோவை தள்ளி வைத்துவிட்டு, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை உள்ளே கொண்டு வர வேண்டும், அதேபோன்று விஜயையும் உள்ளே கொண்டு வர வேண்டும் என்று எஸ் பி வேலுமணியிடம் தெரிவித்து இருக்கிறார் அமித்ஷா.

குறிப்பாக விஜய் கூட்டணிக்குள் வருவது என்னுடைய பொறுப்பு, ஆனால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை உள்ளே கொண்டு வருவது உங்கள் கையில் தான் உள்ளது, தேர்தல் தேதி அறிவிப்பு வர இருக்கிறது கூட்டணியை விரைந்து முடிவு செய்யுங்கள் என எஸ் பி வேலுமணியிடம் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

அமித்ஷா – எஸ் பி வேலுமணி சந்திப்புக்கு பின்பே அன்புமணி அதிமுக கூட்டணியை உறுதி செய்தார், மேலும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையில் சிக்கி இருக்கிறது தவெக, சமீபத்தில் டெல்லியில் நடந்த சிபிஐ விசாரணையில் தவெக நிர்வாகி, சி டி நிர்மல் குமார், ஆதவா அர்ஜுனா , புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் சுமார் 35 கேள்விகள் சிபிஐ அதிகாரிகள் எழுப்பி இருக்கிறார்கள்.

ஆனால் இதற்கு சரியான பதில்களை இவர்கள் மூவரும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது, மேலும் ஆதவ அர்ஜுனா சில வீடியோ ஆதாரங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது , இந்த நிலையில் வரும் 12ஆம் தேதி நடிகர் விஜய்க்கு சிபிஐ சமன் அனுப்பி விசாரணை நடத்த இருக்கிறது. விஜயிடம் கேள்வி எழுப்ப சுமார் 40 கேள்விகளை சிபிஐ கேட்க இருக்கிறது.

இந்நிலயில் விஜய் 12ஆம் தேதி ஆஜராகவில்லை என்றால் கைது செய்ய வாய்ப்பில்லை, மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம், இருந்தாலும் 10 நாட்களுக்குள் விஜய் டெல்லி சென்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக கூடும் என்று கூறப்படுகிறது, மேலும் கரூர் சம்பவத்தில் சுமார் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக மற்றும் விஜய் இருவரும் தப்பிக்க வேண்டும் என்றாலும் பாஜக உதவி தேவை.

அதே நேரத்தில் சிபிஐ விசாரணையில் விஜய்க்கு எதிராக திரும்பினாள் விஜயின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது, அந்த வகையில் டெல்லி சென்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இருக்கும் நடிகர் விஜய் அப்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து தமிழக நலன் குறித்து மனு அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

அதாவது தமிழக நலன் குறித்து மனு அளிப்பது போன்று பாஜகவின் உதவியை விஜய் நாட இருப்பதாகவும், அப்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தாவேகா பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது என்கிற தகவல் வெளியாகியுள்ளது, அதாவது விஜய் தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் பாஜக கூட்டணி தான் ஒரே தீர்வு என்பதால் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து, அடுத்த 2031ல் தன்னை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் முடிவுக்கு விஜய் வந்து விட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here