வடமாவட்டத்தில் மட்டுமே 45 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்த அதிமுக… கதி கலங்கி நிற்கும் திமுக… 2026 தேர்தல் கள நிலவரம்…

0
Follow on Google News

2026 சட்டசபை தேர்தலுக்கான திருப்புமுனையாக அமைத்து இருக்கிறது பாமக – அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதி என்று சொல்லும் பாமக அதிமுக உடன் காய் கோர்த்துள்ளது, வடமாவட்டங்களில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய சுமார் 12 மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு மிக பெரிய அளவில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

வடமாவட்டங்களை பொறுத்தவரை தேர்தல் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் கட்சியாக பாமக இருந்து வந்துள்ளது என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகள் உணர்த்தி இருக்கிறது.மேலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தது என வடமாவட்டத்தில் மட்டுமே வரும் 2026 தேர்தலில் சுமார் 40 முதல் 45 இடங்களில் அதிமுக கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் தென் மாவட்டம் மற்றும் கொங்கு பகுதியில் பலமாக இருக்கும் அதிமுக உடன் வடமாவட்டத்தில் பலமாக இருக்கும் பாமக இணைந்துள்ளது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்கிற கனவு கோட்டையில் ஓட்டை விழும் வகையில் அமைத்துள்ளது. மேலும் தேர்தல் தேதி அறிவுப்புக்கும் முன்பே அதிமுக கூட்டணி பலம் அதிகரித்து வருவது, திமுகவை அதிமுக கூட்டணி வீழ்த்தும் என்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாகி வருவதை பார்க்க முடிகிறது.

ஒருபக்கம் அதிமுகவின் கூட்டணி பலம், மறுப்பக்கம் திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் கடும் அதிருப்தி, குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்று பகுதியில் நிலவும் தண்ணீர் பிரட்சனை, திமுகவினரின் அராஜகம் , இதற்கெல்லாம் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம் என மக்கள் தேர்தல் தேதியை நோக்கி காத்திருக்க, தேர்தல் களம் அதிமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கி வருகிறது.

மேலும் தொடர் ஊழல் குற்றச்சாட்டில் ஒரு பக்கம் திமுக அரசு சிக்கி கொண்டிருக், மறுபக்கம், திமுக – காங்கிரஸ் இடையில் நிலவும் மோதல் போக்கு, இப்படி திமுக கூட்டணிக்குள்ளும் விரிசல் ஏற்பட்டு கொண்டிருப்பது அதிமுக கூட்டணிக்கு சாதகமாக அமைத்துள்ளது, மேலும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு திமுக கூட்டணியில் உரிய மரியாதை இல்லை என்கிற ஏக்கம் தலித் சமூக மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான அலையாக உருவெடுத்து வருகிறது.

தலித் மக்களின் நலனில் அக்கறை காட்டாத திமுக உடன் இனி விசிக கூட்டணியில் தொடர்ந்தாலும் கூட எங்கள் ஓட்டு திமுகவுக்கு இல்லை என பெரும்பான்மையான தலித் சமூக மக்களின் மனநிலையாக இருந்து வருவதை பார்க்க முடிகிறது. இப்படி எல்லாப்பக்கமும் திமுகவுக்கு பாதகமாக சூழல் இருக்கும், மறுபக்கம் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக மாறி வருகிறது.

கடந்த தேர்தல்களில் பாமக வன்னியர் சமூக வாக்குகளை மட்டும் இல்லாமல், வடமாவட்டத்தில் உள்ள இதர சமூக வாக்குகளை பெற்று, தன்னுடைய செல்வாக்கை நிரூபித்து காட்டி இருக்கிறது, மேலும் பாமக வடமாவட்டங்களில் அமைப்பு ரீதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வலுவாக உள்ளது, தொடர்ந்து வன்னியர் சமூகத்தின் குரலாக பாமக ஒலித்து வருவது வன்னிய சமூகம் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிளில் மிக எளிதாக வெற்றி பெற்று வருவதர்க்கு காரணமாக அமைத்துள்ளது.

அந்த வகையில் அதிமுக – பாமக கூட்டணி வரும் 2026 தேர்தலில் திமுகவுக்கு மிக பெரிய சவாலாக அமைத்துள்ளது. மேலும் திமுகவின் கூட்டணி பலம் திமுகவை வீழ்த்த கூடிய கட்சி அதிமுக கூட்டணி தான் என்கிற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உருவெடுக்க தொடங்கியுள்ளது வரும் 2026 தேர்தல் களம் அதிமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here