களம் இறங்கும் அண்ணாமலை… தொகுதியை டிக் செய்த அமித்ஷா… தொகுதி மாறும் செந்தில் பாலாஜி…

0
Follow on Google News

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தமிழகம் வந்து சென்ற பின்பு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக அமித்ஷா திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியை சந்தித்து பேசி அடுத்த சில மணி நேரத்தில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார் அன்புமணி ராமதாஸ், இந்நிலையில் தற்பொழுது அண்ணாமலைக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க தொடங்கி இருக்கிறார் அமித்ஷா.

அதிமுக தலைவர்களில் எஸ் பி வேலுமணி உடன் மிக நெருக்கமாக இருக்க கூடியவர் அண்ணாமலை, குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக உடன் கூட்டணி அமைக்கவே விரும்பியவர் எஸ்பி வேலுமணி, அந்த வகையில் தற்பொழுது மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததில் முக்கிய பங்காற்றியவர் எஸ் பி வேலுமணி, அந்த அளவுக்கு பாஜக உடன் நட்பு பாராட்டி வருகிறவர் எஸ் பி வேலுமணி.

இந்நிலையில் சமீபத்தில் அமித்சா மற்றும் எஸ் பி வேலுமணி சந்திப்பின் போது பாஜக போட்டியிடும் தொகுதி குறித்தும் பேசப்பட்டது என்றும், இதன் பின்பே அதிமுக – பாஜக இரண்டு தரப்பினரும் பேசி தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் அதிமுக – பாஜக இரண்டு கட்சிகள் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுகிறது, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு கோவையில் சீட் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

அந்த வகையில் அதிமுக – பாஜக இரண்டு தரப்பும் பேசி கோவையில் உள்ள 10 சட்டசபை தொகுதியில், பாஜக 3 தொகுதியிலும், அதிமுக 7 தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறது. இதில் கோவையில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளை அதிமுகவிடம் கொடுத்து, அதில் மூன்று தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்குங்க என பாஜக கேட்க, அதற்கு அதிமுக கவுண்டபாளையம், கோவை வடக்கு உட்பட 3 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கி இருக்கிறது.

இதில் கவுண்டம் பாளையம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை போட்டியிட இருக்கிறார், குறிப்பாக அண்ணாமலை வரும் 2026 தேர்தலில் பிரச்சாரம் மட்டும் செய்கிறேன் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை என அமித்ஷாவிடம் தெரிவிக்க அதற்கு, நிச்சயம் தேர்தலில் போட்டியிட்டே ஆகவேண்டும் என கவுண்டம் பாளையம் தொகுதியை அண்ணாமலைக்கு டிக் செய்து இருக்கிறார் அமித்ஷா.

இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கவுண்டம் பாளையம் அதிமுக நிர்வாகிகளிடம் , வரும் 2026 சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் அண்ணாமலை போட்டியிட இருக்கிறார் அனைவரும் அவரை வெற்றி பெற செய்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறார், அந்த வகையில் அண்ணாமலை வரும் 2026 தேர்தலில் கவுண்டம் பாளையம் தொகுதியில் போட்டியிட இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த முறை பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் அதிமுக போட்டியிட இருப்பதால் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் இம்முறை போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொகுதி மாறி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவில் தன்னை கொங்கு மண்டல தளபதியாக முழுமையாக நிலைநிறுத்த கோவையில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்தவர் கடந்த முறை கரூர் தொகுதியி போட்டியிட்டவர் வரும் சட்டசபை தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here