சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை ராம்சர் சதுப்பு நிலத்தின் உள்ளே, சுமார் ரூ. 2,000 கோடி மதிப்பிலான மாபெரும் அடுக்குமாடிக் கட்டுமானத் திட்டத்திற்கு, கடந்த கால ஆட்சியில் தமிழ்நாடு அரசின் முக்கியத் துறைகளான சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவை சட்டவிரோதமாக அனுமதி வழங்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் இதற்கு முன்பு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தது.
மேலும் சதுப்பு நிலப் பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் இந்திய அரசின் 2017 ஈரநிலம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்ட விதிகளின்படி, ராம்சார் நிலங்களில் எந்தவொரு கட்டுமானத்துக்கும் அனுமதி கொடுக்க முடியாது. ஆனால், சட்டத்தைமீறி, பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் ரியல் எஸ்டேட் மோசடி நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டி இருந்தது அறப்போர் இயக்கம்.

இதுகுறித்து இதற்கு அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில்,2000 கோடி ரியல் எஸ்டேட் செய்ய பள்ளிக்கரணை சதுப்பு நல்ல ராம்சார் நிலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பிரிகேட் மார்கன் திட்டத்தின் சர்வே எண்கள் 453, 495, 496, 496, 498 ஆகியவை ராம்சார் தளத்திற்கு உள்ளே வருகிறது என்று நன்றாக தெரியும்.
சட்டப்படி ராம்சார் நிலத்திற்குள் எந்த கட்டுமானத்தையும் அனுமதிக்க கூடாது என்பதும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான சுற்றுச்சூழல் துறை பிரிகேட் நிறுவனத்திற்கு 15 ஏக்கர் அளவில் 1250 அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி தருகிறது. திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக சேகர்பாபு தலைமையிலான பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் துறை கட்டுமான அனுமதி கொடுக்கிறது.
அப்போதைய அமைச்சர் பொன்முடி தலைமையிலான வனத்துறை பொய்யான அறிக்கையை கொடுப்பது மட்டுமில்லாமல் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈரநில ஆணையம் ராம்சார் நிலத்தை பாதுகாக்காமல் மக்களுக்கு துரோகம் செய்கிறது. மேலும் ஒரு பக்கம் முதலமைச்சர் ராம்சார் நிலத்தை பாதுகாப்பேன் என்று சொல்வார். மறுபக்கம் ராம்சார் நிலத்திலேயே 2000 கோடி முதலீடு என்று அவரும் அப்போதைய தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாவும் பிரிகேட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இத்தனை துறைகள் சம்பந்தப்பட்ட இந்த ஊழலில் இந்தத் துறைகளில் இருக்கும் யாராவது ஒரு ஐஏஎஸ் அதிகாரியோ ஒரு அமைச்சரோ நினைத்திருந்தால் கூட இந்த ஊழலை தடுத்து இருக்கலாம். அந்த ஒருவர் கூட அரசில் இல்லாததுதான் கொடுமை என்ன அறப்போர் இயக்கம் பகீர் தகவலை இதற்கு முன்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனை பள்ளிக்கரணை ராம்சார் நிலத்தில் திமுகஅரசு கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்ததை எதிர்த்து அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி வழங்கியது எப்படி, என கேள்வி எழுப்பியதுடன், பிரிகேட் நிறுவனம் பள்ளிக்கரனை சதுப்பு நிலப்பகுதியில் சிஎம்டிஏ எப்படி 1400 குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கியது, இது சட்டவிரோதமானது என்ற கூறியதுடன், பிரிகேட் நிறுவனம், இந்த பகுதியில் குடியிருப்பு கட்டும் கட்டுமான பணிகளை மேற்கெள்ளக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தற்பொழுது தவெக ஆட்சியில் பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சுற்றுசூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது.

