தமிழக முதலமைச்சரக விஜய் பதவியேற்று ஒரு மாதம் கடந்த நிலையில் தற்பொழுது இரண்டாவது முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். குறிப்பாக பதவி ஏற்ற முதல்வர் விஜய் விரைவில் வெள்ளை அறிக்கை விடப்படும் என்று மக்கள் மத்தியில் உறுதி அளித்திருந்தார். ஆனால் முதல்வராக பதவியேற்று முப்பது நாட்கள் ஆன நிலையில் இதுவரை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் வெள்ளை அறிக்கை வெளியாகவில்லை.
ஆனால் முதல்வர் விஜய்க்கு பின்பு முதல்வராக பதவியேற்ற கேரளா அரசாங்கம் அந்த மாநிலத்திற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இப்படியான சூழலில் தமிழக அரசின் வெள்ளை அறிக்கையை வெளியிடுவதில் தாமதத்திற்கு காரணம் தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளால், தமிழகத்தின் நிதி நிலை மிகப்பெரிய அளவில் சீர்கெட்டு இருப்பதாகவும்.

அதனால் சரியான தரவுகளை எடுத்து அதை புள்ளிவிவரத்துடன் வெளியிடுவதற்காக காலதாமதம் தான் ஏற்பட்டிருக்கிறது, விரைவில் வெள்ளை அறிக்கை வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படியான ஒரு சூழலில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் விஜய் டெல்லி சென்று இருக்கிறார், அங்கே ஜனாதிபதி துணை ஜனாதிபதி பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்திருக்கிறார் முதல்வர் விஜய்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்தி கூட்டணி கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை, ஆனால் அந்த கூட்டத்தில் தவெக கலந்து கொள்ளும் என்று எதிர்பார்த்த நிலையில், தவெகவும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை, இந்நிலையில் அடுத்து வரும் இந்தி கூட்டணி கூட்டத்தில் தவெக கலந்து கொள்வதற்கான முயற்சியில் விஜய் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.
குறிப்பாக டெல்லி சென்றுள்ள விஜய், தமிழகம் திரும்புவதற்கு முன்பு சோனியா காந்தி – ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆகிய மூவரையும் சந்தித்து உணவருந்து நிகழ்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய் இதற்கு முன்பு தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா பாணியில் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்களை டீல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சுமார் ஐந்து மொழிகள் தெரியும், அந்த வகையில் எந்தெந்த அமைச்சர்களை சந்தித்தாலும் அந்த அமைச்சர்களுக்கு ஏற்ற மொழியிலேயே பேசி ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்தி தன் மாநிலத்திற்கு தேவையான வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று வருவதில் வல்லமை பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அதேபோன்று டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்களின் செக்ரெட்டிகள் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்கும் விஜய் அவர்களுக்கு ஏற்ற மொழிகளையே பேசி ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்த தொடங்கி விட்டார் என்று கூறப்படுகிறது, காரணம் விஜய் ஒரு சினிமா நடிகராக இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு பல மொழிகள் தெரியும் என்பது குறிப்பிட்டுத்தக்கது.
அந்த வகையில் ஜெயலலிதா பாணியில் தமிழக வளர்ச்சிக்கான ஒரு மத்திய அரசிடம் இணக்கமாக போக்கை விஜய் கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த திமுக ஆட்சி போன்று மத்திய அரசை அரசியலுக்காக எதிர்க்காமல், இணக்கமான உறவை ஏற்படுத்தி தமிழக வளர்ச்சிக்கு தேவையானதை பெறுவதில் மிக சாதுர்யமாக கையாண்டு வருகிறார் முதல்வர் விஜய் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

