நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அடைந்த தோல்வியிலிருந்து மீண்டும் கட்சியை மீட்டெடுப்பதற்கான வேலையில் உதயநிதி ஸ்டாலின் இறங்கி இருக்கிறார். அந்த வகையில் பல மாற்றங்களை திமுகவில் கொண்டு வருவதற்கு உதயநிதி ஸ்டாலின் முயன்று வருகிறார், இருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் மாற்றங்கள் கொண்டுவர முயற்சித்தாலும் அதற்கு பல சீனியர் தலைவர்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.
இருந்தபோதிலும் யார் முட்டுக்கட்டை போட்டாலும் பரவாயில்லை தோல்வியில் இருந்து மீண்டெழுந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் சற்று கரரான முடிவுகளை எடுத்து தீர வேண்டும் என்று முடிவு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின், அதில் பல சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளார், அந்த வகையில் திமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு டி ஆர் பாலுவை நியமிக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த பேச்சு வார்த்தையின் பொழுது ஒரு உதயநிதி ஸ்டாலினுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள், குறிப்பாக இதுவரை பட்டியல் சமூகத்தினரின் வாக்கு திமுக பக்கம் இருந்தது, மேலும் விடுதலை சிறுத்தை கட்சியினரும் திமுகவுடன் கூட்டணியில் இருந்தார்கள். ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பட்டியல் சமூகத்தினரின் பெரும்பாலான வாக்குகள் தமிழக வெற்றிக்கழகம் பக்கம் திரும்பியதின் விளைவு, திமுகவின் கோட்டையாக இருந்த சென்னையே தவெக கைவசம் சென்று விட்டது.
அந்த வகையில் திமுகவில் ஒரு பட்டியல் இன சமூகத்தைச் சார்ந்த ஒருவரை பொதுச் செயலாளராக நியமிக்கும் பொழுது தமிழகத்தில் உள்ள பட்டியல் சமூகத்தினருக்கு திமுக மீது ஒரு நம்பிக்கை ஏற்படும். அந்த வகையில் தற்பொழுது திமுகவின் கொள்கை போர்வாள் என்று அழைக்கப்படும் ஆராசாவை திமுகவின் பொதுச் செயலாளர் நியமிக்கலாம் என்று உதயநிதியிடம் சிலர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது நடக்கும் தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு எதிராகவும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகவும் கவுண்டர் கொடுக்கக்கூடிய சரியான நபர் ஆ ராசா தான் என்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதே போன்று திமுக பொருளாளராக இருக்கக்கூடிய டி ஆர் பாலுவை மாற்றுவது தொடர்பாக எழுந்த பேச்சு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில், அந்த பொறுப்புக்கு கே என் நேரு மற்றும் ஏ வ வேலு ஆகியோர் கடும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் பொருளாளர் பதவிக்கு சாதுரியமாக அரசியல் காய்களை கனிமொழி நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகிறது. இருந்தாலும் ஆ ராசா கனிமொழி ஆகியோர் கட்சியின் உயர் அதிகாரத்திற்கு வந்துவிட்டால், நாம் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்கின்ற அச்சம் உதயநிதி ஸ்டாலினுக்கு இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் துரைமுருகன் பொதுச் செயலாளர் இருந்து மாற்றப்பட்டால் ஆ ராசா கனிமொழி இவர்கள் இருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பதவி அளிக்க வேண்டும் என்று திமுகவில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்களே உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போர் கொடி தூக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் திமுகவின் அதிகாரமிக்க பதவிகளை கைப்பற்ற ஆ ராசா மற்றும் கனிமொழி இருவரும் காய்களை நகர்த்தி வரும் வேலையில், அடுத்து வரும் தேர்தல்களில் டெல்லி அரசியலை கைவிட்டு விட்டு மாநில அரசியலில் இருவரும் கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

