தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பு, முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களை தூசி தட்டி , கைது செய்வதற்கான வேளைகளில் மிக தீவிரம் காட்டி வருகிறார் முதல்வர் விஜய் என்கிற தகவல் அறிவாலய வட்டாரத்தை கதி கலங்க செய்து இருக்கிறது, அந்த வகையில் முன்னாள் திமுக அமைச்சர்கள் கைது வரிசையில் முதல் விஜய் நோட் புக்கில் முதல் வரிசையில் இருப்பது செந்தில் பாலாஜி.
கரூர் சம்பவத்தை நாடு அவ்வளவு சீக்கிரம் மறந்து விடாது, சுமார் 40 உயிர்கள் பறிபோன கரூர் சம்பவத்தை தவெக பக்கமும் , விஜய் பக்கம் திருப்பி விட மும்முரமாக செயல்பட்டது அப்போதைய திமுக அரசு, குறிப்பாக கரூர் சம்பவத்தின் போது தவெக தரப்பில் இருந்து பல்வேறு சந்தேங்கங்களை திமுக அரசுக்கு எதிராக எழுப்பி இருந்தது. குறிப்பாக கரூர் சம்பவத்தின் போது செந்தில்பாலாஜி மீது பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்து இருந்தது தவெக தரப்பு.

நேரடியாகவே சி எம் சார் என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்க, நான் என்னுடைய அலுவலகத்தில் தான் இருப்பேன், மக்களை விட்டுடுங்க என நேரடியாகவே அப்போதைய முதல்வர் முக ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில் பேசி இருந்தார் விஜய், மேலும் திமுக தரப்பு கரூர் விவகாரத்தை முற்றிலும் விஜய் மீது பழியை தூக்கி போட்டு, மக்கள் மத்தியில் விஜய் இமேஜை டேமேஜ் செய்யும் முயற்சியிலும் இறங்கியது.
மேலும் கரூர் விவகாரத்தில் விஜய்யை சட்ட ரீதியாக சிக்க வைக்கும் முயற்சியிலும் இறங்கியது திமுக என்கிற குற்றசாட்டு அப்போது எழுந்தது, அந்த அளவுக்கு கரூர் சம்பவத்தில் விஜய்யை மிக பெரிய சிரமத்திற்கு திமுக தரப்பு செய்தது, அந்த வகையில் கரூர் விவகாரத்தில் செந்தில்பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் கடும் கோபம் விஜய்க்கு இருந்து வருகிறது. அந்த வகையில் திமுக முன்னாள் அமைச்சர்களில் முதலில் செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பும் வேளையில் மிக தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார் முதல்வர் விஜய்.
இந்நிலையில் ஏற்கனவே அமலாக்க துறை வழக்கு செந்தில்பாலாஜி மீது நிலுவையில் உள்ள நிலையில், செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றால் எளிதாக வெளியே வர கூடாது, அந்த அளவுக்கு வழக்கு மிக வலிமையாக இருக்க வேண்டும் என முடிவு செய்த முதல்வர் விஜய். சமீபத்தில் முக்கிய அதிகாரிகளை அழைத்து பேசி இருக்கிறார்.
அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆட்சி காலத்தில் அவர் செய்த முறைகேடுகள் அனைத்தையும் தோண்டி எடுக்க வேண்டும், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அவர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும், இனி செந்தில்பாலாஜி நீதிமன்றம் , சிறை என தன் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டும், அதற்கான வேலைகளை தீவிர படுத்துங்கள் என தெரிவித்தவர், இதில் எந்த அதிகாரியாவது செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செயல்பட்டால் உடனே எனக்கு தகவல் கொடுங்க என தெரிவித்து இருக்கிறார் முதல்வர் விஜய்.
மேலும் தனக்கு நெருக்கமான சிலரிடம் முதல்வர் விஜய் பேசுகையில், என்னுடைய முகத்தை ஒரு முறை பார்த்து விட மாட்டோமா என என்ன காண வந்த மக்களின் உயிர்களில் விளையாடி விட்டார்கள், போதிய பாதுகாப்பை கடந்த கால அரசு கொடுத்து இருந்தால், கரூர் துயர சம்பவம் நடந்து இருக்குமா.? இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என முதல்வர் விஜய் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்த ஜூன் மாதம் இறுதிக்குள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பியே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் விஜய், சமீபத்தில் டெல்லி பயணத்தின் போது, செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்க துறை விசாரணைக்கு தமிழக அரசு சார்பில் என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் என முதல்வர் விஜய் உத்தரவாதம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

