திமுகவுக்கு பாடம் எடுத்த CM விஜய்… சட்டசபையில் திமுக கப் சிப்… ஆளுமை என்றால் இப்படி இருக்கனும்…

0
Follow on Google News

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் தமிழக ஆளுநரை எப்படி கையாள வேண்டும் என்பதை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த திமுகவிற்கு பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியில் தொடர்ந்து தமிழகத்தில் இருந்த இரண்டு ஆளுநர்களிடமே முரண்பாடுடன் செயல்பட்டு வந்தது திமுக அரசு.

குறிப்பாக மக்கள் பிரச்சனையை தீர்ப்பதை தவிர்த்து ஆளுநரிடம் தொடர்ந்து மோதல் போக்கவே கடைப்பிடித்து வந்த திமுக செயலை தமிழக மக்கள் விரும்பவில்லை. இந்த நிலையில் ஆட்சி பொறுப்பு ஏற்று இருக்கும் முதல்வர் விஜய் வீணாக மத்திய அரசிடமும் தமிழக ஆளுநரிடமும் முரண்பட்டு சண்டை இட்டு காலத்தை கழிக்காமல், ஆளுனருடனும் மத்திய அரசுடனும் இணக்கமாக சென்று, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழக மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களையும் செய்வதில்லையே முக்கிய பங்காற்றி வருவது, முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் பேசிய உரை எடுத்துக்காட்டாக அமைந்தது.

குறிப்பாக கடந்த கால திமுக ஆட்சியில் ஆளுநர்ருக்கான உரையில் பல வார்த்தைகளை தவிர்த்து விட்டு முன்னாள் ஆளுநர் ஆர் என் ரவி பேசியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது, ஆனால் தற்போதைய தவெக ஆட்சியில் தவெக அரசு கொடுத்த ஆளுநர் உரையை அப்படியே வாசித்து விட்டு சென்றிருக்கிறார் ஆளுநர் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் தமிழக அரசின் நிர்வாக சுமூகத்திற்காக தன்னுடைய அரசியல் ராஜதந்திர மூலம் மத்திய அரசிடமும் தமிழக ஆளுநரிடமும் தேவையற்ற மோதல் போக்கை கைவிட்டு முதல்வர் விஜய் இணக்கமாக சென்றதின் விளைவாக தான் தற்போதைய அரசு கொடுத்த ஆளுநர் உரையை அப்படியே தமிழக ஆளுநர் பேசியிருக்கிறார் என்றும், இது கடந்த காலத்தில் ஆட்சி செய்த திமுகவிற்கு இது ஒரு பாடம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

குறிப்பாக வழக்கமாக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் பொழுது ஆளுநர் உரையை ஒரு மிகப்பெரிய அரசியல் ஆயுதமாக ஆளும் கட்சியினர் அல்லது எதிர்க்கட்சியினர் பயன்படுத்தி அதை ஊதி பெரிதாக்குவார்கள். கடந்த கால திமுக ஆட்சியில் ஆளுநர் உரைக்கு எதிராக அரசியல் ஆயுதமாக பயன்படுத்திய திமுக , சமீபத்தில் நடந்த தவெக அரசின் ஆளுநர் உரையை மிகப்பெரிய அரசியல் ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டு இருந்தார்கள்.

ஆனால் முதல்வர் விஜயின் ராஜதந்திர நகர்வுகள் திமுகவுக்கு ஆளுநர் உரையை வைத்து அரசியல் செய்ய வழி கொடுக்கவில்லை. குறிப்பாக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது எந்த ஒரு சிறு சலசலப்பு இல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆளுநர் உரையை எந்த வகையிலும் விமர்சனம் செய்து தவெக அரசை பொம்மை அரசு என்றோ அல்லது டம்மி அரசு என்றோ பேச வாய் திறக்காத படி தவிடு பொடியாக்கி விட்டார் முதல்வர் விஜய்.

குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இதை இரண்டை வைத்து ஆளுநர் உரையின் போது அரசியல் செய்யலாம் என்று நினைத்த திமுகவிற்கு அதுவும் பலிக்கவில்லை. தவெக அரசு எந்தவித வீண் பிடிவாதம் இன்றி ஆளுநரின் நியாயமான ஆலோசனையை ஏற்றுக் கொண்டு அந்த விவகாரத்தில் மிக நேர்த்தியாக முற்றுப்புள்ளி வைத்து அரசியல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது தவெக அரசு.

ஆளுநர் மாளிகை தரப்பில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடி கொள்ளுங்கள் அதற்கு பதிலாக தேசிய கீதை ஆரம்பத்திலும் இறுதியிலும் என இரண்டு முறை பாடி விடுங்கள் என்று முன்வைக்கப்பட்ட கருத்தை தவெக அரசு எவ்வித தயக்கம் இன்றி பரஸ்பரம் மரியாதையோடு ஏற்றுக் கொண்டதாக கூறப்படும் நிலையில், மத்திய மாநில அரசுகளின் இணக்கத்திற்கு இது மிகப்பெரிய சிறந்த உதாரணம், குறிப்பாக தமிழ்நாட்டின் பெருமையும் தன்மானமும் காக்கப்படும் அதே வேளையில் தேசத்தின் இறையாண்மையும் போற்றப்படும் என்தில் முதல்வர் விஜய் சமீபத்தில் நடந்த ஆளுநர் உரையில் தமிழக மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here