திருப்பரங்குன்றம் தேர்தல் களம்… கார்த்திகை தீபம் யாருக்கு சாதகம்… வெளியான சர்வே ரிப்போர்ட்…

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப தூண் விவகாரம் மிக பெரிய அளவில் விஸவரூபம் எடுத்து வந்து கொண்டிருக்க, அடுத்த சில நாட்களில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி கள நிலவரம் என்ன.? யாருக்கு சாதகமாக உள்ளது என்பது குறித்து நமது தினசேவல் குழுவினர் நடத்திய கள ஆய்வு முடிவுகள் தற்பொழுது பார்க்கலாம்.

குறிப்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூண் விவகாரம் வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மத்தியில் பார்க்க முடிந்தது, அந்த வகையில் கார்த்திகை தீப விவகாரம் பாஜக, இந்து அமைப்புகள் சார்ந்த விஷயம் என்பதை தாண்டி அது இந்துக்களின் உரிமை என இந்த விவகாரத்தில் பாஜகவினரை தாண்டி பொதுமக்கள் முன்னின்று குரல் கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது.

குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதி கடந்த கால் நுற்றாண்டுகளாக அதிமுக கூட்டணி கைவசமே இருந்து வருகிறது. கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜன் செல்லப்பா சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், அந்த வகையில் திமுக கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் கூட, திருப்பரங்குன்றம் தொகுதி திமுகவுக்கு எதிராக தான் உள்ளது என வெற்றிக்கான மிக பெரிய வாக்கு வித்தியாசம் தெளிவு படுத்தி இருந்தது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு கறுப்பர் கூட்டம் என்கிற பெயரில் கந்தசஷ்டி கவசத்தை ஒரு தரப்பினர் இழிவு படுத்திய விவகாரம் முருக பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்ப்படுத்தி திமுகவுக்கு எதிரான மனநிலைக்கு தள்ளிய நிலையில், குறிப்பாக முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மத்தியில் இருந்த திமுகவிற்கு எதிரான மனநிலையின் வெளிபாடு தான். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது என அரசியல் பார்வையாளர்கள் தங்கள் வாதங்கள் முன் வைத்தனர்.

இந்நிலையில் பொதுவாக திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப தூணின் தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தான் புதுசாக பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்பது போன்ற வெளியாகும் தகவல் முற்றிலும் தவறானது, இந்த விவகாரத்தில் 1991ம் ஆண்டுக்கு பின்பு தான் இந்து அமைப்புகளும், பாஜக போன்ற அரசியல் கட்சிகளும் உள்ளே வந்தது, அதற்கு முன்பு திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் தான் ஒவ்வொரு வருடம் கார்த்திகை தீப தினம் அன்று , திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என போராடி வந்திருக்கிறார்கள்.

அந்த வகையில் அந்த பகுதி மக்களின் 100 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாக உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டும், அதை திமுக அரசு அமல்படுத்தாமல் இருந்தது மட்டுமில்லாமல், அது கார்த்திகை தீப தூண் இல்லை நிலஅளவை கல் என்று திமுக எம்பி கனிமொழி பேசி இருந்தது. மேலும் கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து சடலத்தை சுடுகாட்டில் தான் எரிக்க வேண்டும் மற்ற இடத்தில் எரிக்க முடியாது என திமுக அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது திருப்பரங்குன்றம் மக்கள் மத்தியில் திமுகவுக்கான எதிர்ப்பு அலை உச்சத்தில் உள்ளதை பார்க்க முடிகிறது.

மேலும் இந்த தொகுதியில் ராஜன் செல்லப்பாவுக்கு என்று தனி செல்வாக்கு இருக்கும் நிலையில், திமுகவுக்கு எதிராக மீண்டும் வரும் தேர்தலில் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா போட்டியிட இருப்பது திருப்பரங்குன்றம் தொகுதியை அதிமுக மீண்டும் தக்க வைக்கும்,