திருப்பரங்குன்றம் வரும் பிரதமர் மோடி… வந்திருக்கும் SPG Team .. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…

0
Follow on Google News

வரும் தமிழக சட்டசபை தேர்தலை குறிவைத்து சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து திரும்பிய நிலையில், அடுத்து பிரதமர் மோடி மதுரை வர இருக்கிறார், வரும் ஜனவரி 23ம் தேதி பிரதமர் மோடி மதுரை வரும் பிரதமர் மோடி , மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள அம்மா திடலில் நடக்கும் மிக பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார், பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பே அணைத்து கட்சி தலைவர்களிடம் பேசி கூட்டணியை உறுதி செய்யவேண்டும் என சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக, பாஜக , பாமக, தமாகா , திருமாறன் ஜியின் தென் இந்திய பார்வேர்ட் ப்ளாக் கட்சி, புதிய நீதி கட்சி ஏசி சண்முகம் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் தேமுதிக, அமமுக போன்ற கட்சிகளுடன் தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக இரண்டு தரப்பிலும் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொன்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வரும் ஜனவரி 23ம் தேதி பிரதமர் கலந்து கொள்ள இருக்கும் மதுரை நிகழ்ச்சி மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும், அதற்குள் தேமுதிக, அமமுக போன்ற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என்பதர்க்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, பாமக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கான தொகுதிகள் எத்தனை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது எத்தனை தொகுதி என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் ,எந்தந்த தொகுதி என்பது ஓரளவு தான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இந்நிலையில் மதுரை வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது,

வரும் 23ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி அன்றைய தினம் மதுரை பாண்டிகோவிலில் நடைபெறும் கட்சி பொது கூட்டத்தில் கலந்து கொண்டு அங்கிருந்து ஹெலிக்கப்பட்டார் மூலம் மதுரை விமானம் நிலையம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலையில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்கும் பிரதமர் மோடி, அடுத்து மறுநாள் அதிகாலை பசுமலையில் தாஜ் ஓட்டலில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்யும் திட்டமும் உள்ளது என்றும்.

திருப்பரங்குன்றம் முருகனை தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கார் மூலம் மதுரை விமானம் நிலையம் செல்லும் மோடி, விமானம் மூலம் டெல்லி திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் விசிட் தொடர்பான பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்ய SPG டீம் மதுரை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் சில பாதுகாப்பு காரணமாக இம்முறை பிரதமர் மோடி மதுரை கட்சி நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டுவிட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பயணத்தை தவிர்க்கவும் வாய்ப்புள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது, தற்பொழுது ஐயப்பன் கோவில் சீசன் மற்றும் தைப்பூசம் முருகன் பக்தர்கள் சீசன் என்பதாலும், மேலும் சில பாதுகாப்பு சூழல் கருதி கடைசி நேரத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்க்கு பிரதமர் விசிடில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.