தமிழகத்தில் பாஜக நோட்டா கட்சி என்கிற பிம்பம் உடைக்கப்பட்டு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 4 சட்டமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 11 சதவிகித வாக்கு வங்கியை நிரூபித்தது பாஜக, ஆனால் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக – திமுக என்கிற இரு மாபெரும் இயக்கத்திற்கு மத்தியில், அதுவும் கருணாநிதி – ஜெயலலிதா என்கிற இரண்டு ஆளுமையான தலைவர்கள் இருந்த பொது பாஜக பலம் என்ன என்பதை மதுரையில் நிரூபித்து காண்பித்தவர் ஏ ஆர் மஹாலக்ஷ்மி.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திமுக – அதிமுக இரண்டு கட்சிகளுக்கு யாருடன் கூட்டணி அமைக்காமல் பாஜக தனித்து தமிழகம் முழுவதும் போட்டியிட்டது, ஓரிரு தொகுதியில் சிறு சிறு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தொகுதியை பங்கீட்டு கொண்டது பாஜக, அந்த தேர்தலில் அதிமுக – திமுக இடையிலான நேரடி போட்டிக்கு மத்தியில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஏ ஆர் மஹாலக்ஷ்மி சுமார் 10.96 சதவிகிதம் வாக்குகளை பெற்று மதுரையில் பாஜக இன்று விருச்சகமாக வளர்வதற்கு அன்று விதையாக இருந்தது 2016 சட்டசபை தேர்தலில் ஏ ஆர் மஹாலக்ஷ்மி பெற்ற 10.96 சதவிகித வாக்குகள்.

குறிப்பாக அன்றைய காலகட்டத்தில், கோவை – கன்னியாகுமாரி ஆகிய இரண்டு மாவட்டத்தை தவிர்த்து பிறமாவட்டத்தில் மக்கள் மத்தியில் பாஜக மிக பெரிய அளவில் பேசும் பொருளாக இல்லை, பொதுவாக வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இது வாஜ்பாய் கட்சி என்பார்கள், மோடி பிரதமரான பின்பு இது மோடி கட்சி என்பார்கள், அதை தாண்டி இந்த கட்சி பெயர் பாஜக, இந்த கட்சியின் சின்னம் தாமரை என்றெல்லாம் தமிழ்கத்தில் பல பகுதிகளில் தற்பொழுது உள்ளது போன்று பட்டி தொட்டி எங்கும் பாஜக இந்த அளவுக்கு மிக பெரிய வளர்ச்சி அடைய வில்லை.
இப்படி பட்ட ஒரு சூழலில் அதுவும், கருணாநிதி – ஜெயலலிதா இருபெரும் தலைவர்கள் இருக்கும் போதே, மதுரை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு ஏ ஆர் மஹாலக்ஷ்மி 10.96 சதவீதம் வாக்குகளை அன்று அவ்வளவு எளிதாக அவர் பெறவில்லை. குறிப்பாக தொடர்ந்து அவர் இருக்கும் தெற்கு தொகுதியில் ஒவ்வொரு வருடமும் அவருடைய சொந்த பணத்தில் தன்னுடைய பிறந்தநாள் அன்று வழங்கும் நலத்திட்டம் அவரை அந்த பகுதி மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது, பாஜக என்கிற கட்சியையும் கொண்டு சேர்க்க உதவியது.
மேலும் மதுரையின் அடையாளம் என சொல்ல கூடிய சித்திரை திருவிழாவை பாஜகவை வளர்க்க மிக சாதுர்யமாக பயன்படுத்தி கொண்டார் ஏ ஆர் மஹாலக்ஷ்மி, ஒவ்வொரு வருடம் மதுரை சித்திரை திருவிழாவின் போது, தன்னுடைய சொந்த பணத்தில் சித்திரை திருவிழாவில் பங்கேற்ற மக்களுக்கு லட்சக்கணக்கான விசிறியை அன்பளிப்பாக கொடுத்தது வந்தார் , வருகிறார் ஏ ஆர் மஹாலக்ஷ்மி. குறிப்பாக இந்த விசிறியில் தான் ட்விஸ்ட்டே இருக்கிறது.
அதாவது அந்த விசிறியில் தாமரை சின்னம், ஏ ஆர் மகாலகஷ்மி உட்பட பாஜக தலைவர்கள் படம் பொறிக்கப்பட்டிருக்கும், சித்திரை வெயிலில் அழகரை காண கூடியிருக்கும் மக்களுக்கு இந்த விசிறியை பயனாக இருந்தது மட்டுமில்லமால், லச்சக்கணக்கான மக்களிடம் பாஜக சின்னத்தையும், பாஜக கட்சியையும் கொண்டு சேர்க்க காரணமாக இருக்கும் விசிறியை மக்களுக்கு அன்பளிப்பாக தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
இப்படி மதுரையில் பாஜக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் ஏ ஆர் மஹாலட்சுமி கட்சி நிர்வாகி முதல் மேல்மட்ட தலைவர்கள் நன்மதிப்பை பெற்றவராக இருந்து வருகிறார். குறிப்பாக கடந்த 2016 சட்டசபை தேர்தலிலே 16,069 வாக்குகள் பெற்று பாஜகவுக்கு சுமார் 10.96 சதவிகிதம் வாக்குகளை பெற்று கொடுத்ததை தொடர்ந்து அவரை அங்கீகரிக்கும் விதமாக தொடர்ந்து பாஜக பல பொறுப்புகள் ஏ ஆர் மகாலட்சுமிக்கு கொடுத்து வந்தது குறிப்பிடதக்கது.

